Home » உயிருக்கு நேர்- 30
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்- 30

தமிழவேள் உமாமகேசுவரனார்

தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (07.05.1883 – 09.05.1941)

சங்ககாலத் தமிழரின் ஏற்றத்தை இந்நாள் வரை உலகம் அறிந்து கொள்ள ஏதுவாயிருப்பவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் எழ தமிழ்ச் சங்கங்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய காலம் மற்றும் சங்கங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய பல செய்திகள் பழைய செய்யுட்கள் வழிக் கிடைக்கின்றன. சங்கம் என்ற கூட்டமைப்புகள் தமிழிலக்கியங்கள், தமிழர் வாழ்வு போன்ற அனைத்துப் பொருண்மைகளிலும் நற்பேறுகளை துலக்கமாக எடுத்து வைக்கும் முகமாகவே இயங்கியிருக்கின்றன. பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் நாமறிந்த தமிழ்ச்சங்கங்கள் சில உண்டு. அவற்றில் துலக்கமாகத் தெரிவது இரண்டு; முதலாவது மதுரையில் சேதுநாட்டுப் பாண்டித்துரைத் தேவரின் முயற்சியில் அமைந்த தமிழ்ச்சங்கம். இது குறிப்பிடத்தக்கவாறு நெடும் ஆண்டுகளுக்குச் சிறப்பாக இயங்கியது. மூன்று சங்ககாலத் தமிழ்ச்சங்கங்களுக்குப் பிறகு தமிழுக்காக, தமிழிலக்கியத்திற்காகத் தோன்றிய தமிழ்ச்சங்கம் என்பதாலேயே, 1901’ல் தோன்றிய மதுரைத் தமிழ்ச்சங்கம் நான்காம் தமிழ்ச்சங்கம் என்று அழைக்கப் பெற்றது. அதற்கடுத்ததாகத் தோன்றியது 1911’ல் தோன்றிய கரந்தைத் தமிழ்ச்சங்கம்.

கரந்தை என்ற கருந்தட்டங்குடி தஞ்சைக்கு அருகில் அமைந்ததொரு சிற்றூர். அங்கு தோன்றிய ஒரு மகத்தான மனிதரின் அருமுயற்சியே கரந்தைத் தமிழ்ச்சங்கம் தோன்றி நிலைத்ததற்கு முக்கியக் காரணம். தகுதியால் அவர் வழக்கறிஞர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமான 1910’களில், பார்ப்பனர்கள் தவிர வேறு சாதியார் அதிகமாக வழக்கறிஞர் கல்வி கற்றுத் தேர்வு பெற்று வராத காலங்களில், வேற்றினத்தவரான இவர் வழக்கறிஞர் கல்வி கற்று வழக்கறிஞரானார். மிகச்சிறந்த வழக்காடும் திறமையோடு, ஏழை மக்களுக்குக் கட்டணம் வாங்காமல் வழக்கு நடத்தும் இவரது பண்பு, இவரது புகழை எங்கெங்கும் பரப்பியது. அப்புகழ் இவருக்கு அரசின் கூடுதல் வழக்கறிஞராகத் தேர்வு பெற்ற வாய்ப்பையும் வழங்கியது. இத்தனை சிறப்பான தொழிற்புலம் இருந்தும், அவரது வாக்கும், மனமும், செயலும், உளமும் தமிழ், தமிழ் என்றே இயங்கி வந்தன. கரந்தைத் தமிழ்ச்சங்கத்தை ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் தலைவராக இருந்து வழிநடத்திய பெருமகனார் இவர். தமிழவேள் உமாமகேசுவரனார் என்ற பெருமகனே இந்தப் பகுதியின் உயிருக்கு நேர் நாயகர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!