Home » முடியாத போர்கள்; பலிக்காத மிரட்டல்கள்
உலகம்

முடியாத போர்கள்; பலிக்காத மிரட்டல்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உக்ரைன் கொள்கையில் ஒரு வினோதமான முரண்பாடு தெரிகிறது. ஒரு பக்கம் உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுக்க ஒப்புக்கொள்கிறார். மறுபக்கம் ரஷ்யாவிடம் போரை நிறுத்தச் சொல்கிறார். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிற அவரது இந்த நிலைப்பாடு சர்வதேச அரசியலில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நேட்டோ உச்சிமாநாட்டில் செலென்ஸ்கி உடனான சந்திப்பில் டிரம்ப் உக்ரைனுக்கு பேட்ரியட் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கப் பரிசீலிப்பதாகக் கூறினார். அதேநேரத்தில் ரஷ்ய அதிபர் புடினிடம் ‘போரை நிறுத்துங்கள்’ என்றும் கேட்டுக்கொண்டார். இரண்டும் ஒரே நேரத்தில் எப்படிச் சாத்தியம் என்பது புரியவில்லை.

அமெரிக்கா வழங்கும் ஆயுத உதவிகளுக்கு முக்கியமான நிபந்தனை ஒன்று உள்ளது. அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் இந்த ஆயுதங்களை உக்ரைன் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியாது. குறிப்பாக, இந்த ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா மீது தாக்குதல் நடத்தக் கடுமையான தடைகள் உள்ளன. ரஷ்யாவின் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டுமானால் வாஷிங்டனின் முன்அனுமதியைப் பெற வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் உக்ரைனின் போர்த் திட்டங்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!