Home » (பணக்கார) மாப்ள சார்!
உலகம்

(பணக்கார) மாப்ள சார்!

உலகத்தில் முதல் பணக்காரர் என்ற இடத்திலிருந்து மூன்றாம் இடத்துக்கு இறங்கியவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ். இவருக்கும், லாரன் சான்சே என்ற தொலைக்காட்சிப் பத்திரிகையாளருக்கும் சென்ற வாரம் இத்தாலியின் வெனிஸ் நகரில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்தத் திருமணத்தில் ஹாலிவுட் நட்சத்திரம் லியோனார்டோ டி’காப்ரியோ, தொலைக்காட்சி நட்சத்திரங்களான கிம் கர்தாஷியன், க்ரிஸ் ஜென்னர், ஓப்ரா கைல் வின்ஃப்ரே, அமெரிக்க ஃபுட்பால் விளையாட்டு வீரர் டாம் பிராடி, மைக்ரோசாஃப்ட் பில் கேட்ஸ், ட்ரம்பின் மகளான இவானா ட்ரம்ப், அவரது கணவர் என்று 250 பிரபலங்கள் கலந்துகொண்டனர். என்ன? உலகப் பணக்காரரின் திருமணத்துக்கு வந்தது 250 பேர் மட்டும்தானா என்ற ஆச்சரியம் வேண்டாம். அமெரிக்கக்காரர்கள் திருமணத்துக்கு இருநூறு பேர் வந்தாலே அது மிகப் பெரிய கூட்டம்.

வெனிஸ் நகரின் அழகைப் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உல்லாச உலகம் வெனிஸ். நகருக்கு உள்ளேயும், சுற்றியும் தண்ணீர்தான். 177 கால்வாய்கள், நானூறு பாலங்கள் உள்ள இந்நகரில் நம்மூர் ஆட்டோக்கள் போல படகுகளில் இன்ப உலா வரலாம். அதனாலேயே வெனிஸை ‘ரொமாண்டிக் சிட்டி’ என்று அழைக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!