Home » உரி – 7
உரி நாள்தோறும்

உரி – 7

7. அயில்

நீலக் கிளியின் நாசி நுனியில் அமர்ந்திருந்தேன். பறப்பது சிரமமாக இருப்பதாக அபுது சொன்னதை நினைவுகூர்ந்தால், பறக்கும் கிளியின்மீது அமர்ந்து பயணம் செய்வது சுகமானதாகவே தோன்றியது. சுமையாக இறங்காதவரை எதன்மீதும் வசிக்கலாம். சுமையாகிவிடாதவரை எதையும் ஏந்தி அழகு பார்க்கலாம். அபுது என் ஆர்வத்தைப் பூக்கச் செய்துகொண்டே இருந்தான். ஒரு வேயனின்* சிந்தையைப் படிப்பது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அவன் நான் எதிர்பார்த்த விவரங்களைச் சிந்திக்காமலேயே இருந்தான். ஒரு சொற்றொடர். அவ்வளவுகூட வேண்டாம். ஒரு சொல் போதும். அவனுக்குத் திருமுகம் சொல்லும் மனிதனைக் குறித்த தூசளவு குறிப்பு எனக்குப் போதுமானது. அவனை அகழ்ந்து இவனைக் கண்டெடுத்துவிடுவேன்.

கேவலம், ஒரு பெயரைத் தெரிந்துகொள்ளவும் வழியற்றுக் கிடப்பது சலிப்பூட்டியது. அபுதுவின் உட்செவியில் வந்து பேசுகிறவனை அவன் குரவர்* என்றே கருதினான். ஐங்குரவரில் இவன் யாராயிருக்கும் என்று கண்டறிய முடியவில்லை. குருவாகவே இருக்கலாம். வாய்ப்பு அதற்கே அதிகம். ஆனால் நான் ஊகங்களுக்கு என்னைத் தின்னக் கொடுத்துவிடக் கூடாது. சரியான தகவல்களைக் கோத்தாலே இச்சுழலின் ஊற்றுக் கண்ணை எட்டித் தொடுவது சிரமமாக இருக்கும் என்று தோன்றியது. ஊகத்துக்கெல்லாம் பொருளேயில்லை.

பறந்துகொண்டிருந்த கிளி, காரோணத்தின் தென்மாட வீதியின் கடைசியில் இருந்த வைகானசர்* குடியிருப்பில் சட்டென்று இறங்கியது. தென்னங்கீற்றுகள் வேயப்பட்ட எட்டுக் களிமண் வீடுகள் அங்கிருந்தன. எட்டு வீடுகளுக்கும் பொதுவான வேலிப்படல் ஒன்றிருந்தது. படலெங்கும் காக்கணம்* பூத்துச் செழித்திருந்தது. படலுக்கு உட்புறம் ஒரு சோலையளவுக்கே செடிகளும் தென்னையும் அடர்ந்து நிறைந்திருந்தன. எட்டு வீட்டு வாசல்களிலும் சாணந்தெளித்துத் திருமெழுக்கிட்டிருந்தார்கள். எல்லா வீடுகளுக்குள்ளிருந்தும் உரத்த பேச்சுக் குரல்கள் கேட்டன. குழந்தைகள் இங்குமங்கும் ஓடின. கலயங்களின் உரசல் ஒலி கேட்டது. சில வீடுகளில் பெண்கள் கீழ்க் குரலில் பாடிக்கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு சிவ பண்டிதர்கள் குடில்களுக்கு வெளியே மரத்தடியில் தடுக்கு* விரித்து அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!