Home » உரி – 9
உரி நாள்தோறும்

உரி – 9

9. கிக்கீ

எதையும் எண்ணாமல் இருந்தவரை நான் நிம்மதியாக இருந்தேன்.

என்ன வினோதம் இது! இருங்கள். நிம்மதி என்கிற சொல்லேகூட எனக்குரியதல்ல. இருந்தேன். அவ்வளவுதான். யாருமறியாச் சொல்லுக்கு எதையும் உணர அவசியம் உண்டானதில்லை. எல்லாம் தன்னியல்பில் தலைகீழாகிவிட்டன. பாருங்கள், அபுது எங்கே சென்றான், என்னவானான் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டேன். நீலக்கிளி வடிவத்தை அவன் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். அவனுக்குத் திருமுகம் சொல்லி வழிநடத்தும் யாரோ ஒருவன் அதை ஏற்றுக்கொண்டான் என்றுதான் தோன்றியது. அபுது எவ்வடிவில் வந்தாலும் அது என் பிரச்னையல்ல. அவன் ஏன் இன்னும் வரவில்லை என்றுதான் தெரியவில்லை. பாரதாய தத்தனின் இல்லத்தில் நான் தவறவிடாதிருந்திருந்தால் இந்நேரம் அபுதுவின் வீட்டை அறிந்திருப்பேன். அவனது தாயைக் கண்டிருப்பேன். அவளது உடல் நலக் குறைபாடு என்னவென்பதையும் அதைத் தீர்த்து வைத்தவன் யாரென்பதையும் அறிந்திருப்பேன். மாறாக, இச்சார்வாகனால் சித்தம் கலக்கமுற்றிருக்கும் தத்தனை எண்ணியவண்ணம் வெறுமனே மீளும்படி ஆகிப் போனது.

இழப்பென்று சொல்ல மாட்டேன். தாவளத்திலிருந்து திரும்பும்போது அவன் தனது வழக்கத்துக்கு விரோதமாக நிறையவே சிந்தித்தான். நான் எதிர்நோக்கிய ஒன்று தட்டுப்படவில்லை ஆயினும் அவனை மேலும் அணுகி அறிய அது உதவியாக இருந்ததை மறுக்க இயலாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!