01 ஒரு லட்டில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்?
குரு சீடனிடம் லட்டைக் கொடுத்தார்.
‘அதில் எத்தனை பூந்திகள் இருக்கலாம்?’ என வினவினார்.
தட்டில் வைத்துப் பிட்டு எண்ணத் தொடங்கினான்.
சிறிது நேரம் கழித்துக் கேட்டார்.
‘லட்டு எங்கே?’
தட்டைப் பார்த்தான். பூந்திகளாக உதிர்ந்திருந்தது.
அன்றிரவு பூவனத்து ஓய்வு மேடையில் படுத்து வானைக் கவனித்தான்.
விண்மீன்கள் சிதறிக் கிடந்தன.















Add Comment