22. கட்டற்றவன்
உனக்குத் தெரியுமா? தளவாடப் பண்டாரமாக நீங்கள் மாற்றி வைத்திருக்கும் இந்த இடம் ஒருநூற்று எண்பத்து ஒன்பது யாண்டுகளுக்கு முன்னம், உங்கள் வடகாளி* இங்கு வருவதற்கும் முன்பு தெய்யமென ஊர் சொன்ன வேட்டன் எறிபத்தனின் திருவுண்ணாழிகையாக* இருந்தது. அருமொழியின் ஓட்டனுக்குச் சேயோனாக* இருந்தவன் அவனை அறிவான். கொன்றவனும், பிறகு கோயிலெழுப்பிப் பாவம் தொலைத்ததாக எண்ணிக்கொண்டு கடந்தவனும் அவனேதான். காலமொரு கோயிலைப் பண்டாரமாக்கலாம் வீரனே. மனையென்றும் மாளிகையென்றும் பண்டாரமென்றும் கோயிலென்றும் இடத்துக்கொரு பெயரைக் கொடுப்பது நீயும் நானுமன்றி யாருமல்ல. ஆயின், நிலமென்றும் அதில் நிகழ்ந்ததென்றும் உள்ளவை எது ஒன்றும் மாறாது என்பதைத் தெரிந்துகொள்.
பண்டாரக் கொட்டடித் திண்ணையில் அவன் இருக்கப் பணிக்கப்பட்டிருந்தான். உடனிருந்த யாமக்காவலன் அவனுக்குக் காய்ச்சோற்றையும் அவித்த கிழங்குகளையும் உண்ணக் கொடுத்து,
இப்படியே படுத்திரு. விடிந்ததும் உன்னை விசாரிப்பார்கள், என்று சொல்லியிருந்தான்.










Add Comment