Home » உரு – 18
உரு தொடரும்

உரு – 18

முத்து நெடுமாறன்

ஒரு மொழி ஒரு குறியீடு

தொழில்நுட்பம் அன்பு செய்ய மட்டுமா பயன்படுகிறது? உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும் குற்றங்களுக்கும் கூட தொழில்நுட்பம் உதவுகிறது. உருவாக்கி உயிர் கொடுத்ததால் முத்து நெடுமாறன் மீது சந்தேகத்தின் நிழல் விழுந்த சம்பவம் கூட ஒன்றுண்டு.

செல்பேசிக் குறுஞ்செய்தி எல்லாம் வழக்கொழிந்து திறன்பேசிகள் கோலோச்சிய பிறகு தன்னுடைய செல்பேசி எண் ஒன்று பழைய தொழில்நுட்பத்தோடு இணைந்திருப்பதையே முத்து மறந்துவிட்டார். தமிழ் போராளிக் குழுவில் இருப்போர் நவீனத் தொழில்நுட்பம் காவல்துறை கண்காணிப்பில் இருக்கும் என்பதால் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த எண்ணினர் போலும். தரவிறக்கம் செய்து குறுஞ்செய்தி அனுப்பும் முத்துவின் பழைய தொழில்நுட்பத்தைத் தொட்டதும் காவல்துறைக்குச் செய்தி போய்விட்ட.து. அதில் இருந்த முத்துவின் எண்ணைக் கொண்டு விசாரித்து அவரைத் தொடர்பு கொண்டனர்.

“நீங்கள் சிங்கப்பூர் காவல் நிலையம் வரைக்கும் வந்து போக வேண்டும்” என்று அன்பாகக் கோரிக்கை வைத்தார்கள். “வருகிறேனே” என்று சொல்லிவிட்டுக் கொடுக்கப்பட்ட முகவரிக்குச் சென்றார். “எதற்காக?” என்று கேட்டதற்கு “நேரில்தான் சொல்வோம்” என்று பணிவாக பதிலளித்திருந்தனர்.

முகவரியில் இருந்த கட்டடத்தைப் பார்த்ததும் ஏதோ வில்லங்கமான விவகாரம் முத்து என்று புரிந்து கொண்டார். ஊருக்கு ஒதுக்குப் புறமாக, காவல் நிலையம் என்று சொல்லத்தக்க எந்த அடையாளமும் இன்றி இருந்தது அந்தக் கட்டடம். உள்ளே செல்லும் முன்பு எதற்கும் இருக்கட்டும் என்று மனைவிக்கும் நண்பருக்கும் தகவல் தெரிவித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!