போன வாரம் அமெரிக்காவே அந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் திரும்பிப் பார்த்தது. காரணம் விண்ட்சர்ஃப் (Windsurf) என்கிற இந்த நிறுவனத்தைச் சுமார் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஓபன்-ஏ.ஐ. (சாட்-ஜிபிடி) நிறுவனம் வாங்கியது. அப்படி என்ன மந்திரம் இருக்கிறது விண்ட்சர்ஃப் செயலியில்?
இன்று செயற்கை நுண்ணறிவைக் கொண்டு கட்டுரைகளை, படங்களை உருவாக்கச் சொல்கிறோம். சிறியளவு மென்பொருள் நிரலிகளையும் கூட எழுதச் சொல்ல முடிகிறது. ஆனால் தேர்ந்த மென்பொருள் பொறியாளரைப் போலவே இயற்றறிவு செயல்பட முடியுமா? முடியும் என்று செய்து காட்டிய செயலிதான் விண்ட்சர்ஃப். இதை உங்கள் கணினியில் நிறுவி நீங்கள் மனத்தில் நினைத்த ஒரு மென்பொருளுக்கான குறிக்கோள்களையும், எப்படிச் செயல்பட வேண்டும் என ஓரிரு வரிகள் ஆங்கிலத்தில் சொன்னால் போதும். முழு மென்பொருளையும் எழுதிக் கொடுத்துவிடும். அதோடு, குறிப்பிட்ட நிரலியைப் பற்றி நீங்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு தகுதியான உதவியாளரைப் போலப் பதில் சொல்லும்.














Add Comment