19. Professor to order
நம் வீட்டுக்கு ஒரு சோஃபா வாங்குவதென்றால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு: கடையில் இருக்கிற ஒரு நல்ல சோஃபாவைத் தேர்ந்தெடுத்து வாங்கலாம், அல்லது, நம் வீட்டில் சோஃபா இருக்கவேண்டிய இடத்தை அளந்து பார்த்து அதற்கேற்ற ஒரு சோஃபாவைச் செய்யச்சொல்லலாம்.
மேலுள்ள முதல் வகையை ஆங்கிலத்தில் ‘ready made’ (ஏற்கெனவே செய்யப்பட்டு ஆயத்தமாக இருப்பது) என்பார்கள், இரண்டாம் வகையை ‘made to order’ (ஆணைக்கேற்பச் செய்யப்படுவது) என்பார்கள்.
கோகலேவை அவருடைய நண்பர்கள், மற்ற பேராசிரியர்கள் ‘made to order professor’ அல்லது ‘professor to order’ என்று அழைத்தார்கள். ஏனெனில், மற்ற ஆசிரியர்களைப்போல் அவர் ஒரே ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் ஆழமாகச் செல்லவில்லை, பள்ளியிலோ, கல்லூரியிலோ என்ன தேவை இருக்கிறதோ அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொண்டார். ஆங்கிலம் நடத்தச் சொன்னால் நடத்துவார், கொஞ்ச நாள் கணக்குப் பாடம் எடுங்கள் என்றால் தலையாட்டுவார், வரலாற்றுப் பாடத்தை நடத்துவதற்கு ஆள் குறைகிறது என்றால் கையைத் தூக்குவார், அப்படியே அரசியல், பொருளாதாரப் பாடத்தையும் கவனித்துக்கொள்ளுங்களேன் என்றால் அதற்கும் சம்மதம்தான்.










Add Comment