‘டிஜிட்டல்மயமாகிவிட்ட இன்றைய உலகம், கடைசிக் காகிதத்தைக் கசக்கி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றே பலரும் எண்ணினார்கள். அந்த அளவுக்குச் சந்தையில் காகிதங்களின் இடத்தைப் பறித்திருந்தது டிஜிட்டல் யுகப் புரட்சி. கணிசமான ஜென் ஸீ இளைஞர்கள் அச்சுப் புத்தகத்திலிருந்து கிண்டிலுக்கு மாறிவிட்டார்கள். அலுவலகங்கள் பேப்பர்லெஸ் ஆஃபீஸ் என்ற இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. கடிதங்கள் எழுதுவது வழக்கொழிந்து போய்விட்டது. செய்தித்தாள்களின் விற்பனை சுருங்கிவிட்டது. ஆனால் இத்தனை இடர்ப்பாடுகளையும் தாண்டி காகிதத் தொழிற்சாலைகள் லாபத்தில் இயங்குவதாகக் கூறுகிறார்கள் அதன் உரிமையாளர்கள். டிஜிட்டல் யுகத்திலும் காகிதங்கள் தங்களுக்கான இடத்தைக் கண்டுகொண்டன என்பதையே இது காட்டுகிறது.
காகிதத்தின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் வரலாறும்தான். மனிதரின் சிந்தனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும், வெவ்வேறு நாடுகளுக்கும் கடத்தப்பட்டது காகிதத்தின் வழியாகத்தான். மனிதன் எழுதத் தொடங்கியபின்தான் வரலாறு உருவானது என்பார்கள் எனில், வரலாற்றை உருவாக்கியது காகிதங்கள் என்றாகிறது.
காகிதம் பிறப்பதற்குமுன் மக்கள் வெவ்வேறு பொருள்களைப் பயன்படுத்தி எழுதிவந்தனர். மெசபடோமியர்கள் களிமண் பலகைகளைப் பயன்படுத்தினர். எகிப்தியர்கள் பாபிரஸ் என்ற நாணல் போன்ற செடியிலிருந்து பிழிந்தெடுத்த வெண்பசையைக்கொண்டு தடித்த காகிதங்களை உருவாக்கினர். ரோமானியர்களும் கிரேக்கர்களும் விலங்குகளின் தோலைக் காகிதமாகப் பயன்படுத்தினர். இந்தியர்கள் பனையோலையில் எழுதினர். இவை கனமானதாகவும், விலையுயர்ந்ததாகவும், கவனமாகக் கையாள வேண்டியதாகவும் இருந்தன.














Add Comment