முன்பெல்லாம் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மீதான ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு முன்னணியிலேயே இருந்த நிறுவனமென்றால்… கண்ணைக் கட்டிக்கொண்டு ‘ஓப்பன் ஏ.ஐ.` திசையை நோக்கி விரல் நீட்டி விடுவார்கள். கடந்த ஓரிரு வருடங்களாகத்தான், கணினித் தொழிலெனும் தண்டலை எடுத்த எல்லா தண்டல்காரர்களும் தங்களை செய்யறிவு நுட்பத்திற்கு ஏதுவாக தகவமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஓப்பன் ஏ.ஐ. உச்சாணிக் கொம்பில் அமர்ந்திருக்கும்போதே, அது மைக்ரோசாஃப்ட்டுடன் செய்துகொண்ட சில உடன்பாடுகளில் தங்களுக்கு உவப்பில்லை என்று சொல்லிக்கொண்டு ஆராய்ச்சியில் இருந்த சிலர் வெளிவந்தனர். மிகக்குறிப்பாக… மூத்த ஆராய்ச்சி இயக்குநராக இருந்த தேரியோ அமோதேயும், அவரது சகோதரரான டேனியலோ அமோதேயும். (Dario Amodei மற்றும் Daniela Amodei) வெளியே வந்த அவர்கள், அதிருப்தியில் இருந்த இன்னும் சில ஓப்பன் ஏ.ஐ. சகாக்களை இழுத்துக்கொண்டு வந்து ஆரம்பித்ததுதான் `ஆந்த்ராபிக்` (Anthropic) என்கிற இந்த ஏ.ஐ. நிறுவனம்.
too technical to me..