Home » அதிகார நந்தி – 5
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 5

சரியும் மணல் வீடுகள்

ஒரு காலத்தில் பிரிட்டனின் குடியேற்ற ஆதிக்கம் போல, உலகெங்கும் இப்போது அமெரிக்கக் குடியேற்ற ஆதிக்கம். ஆனால், இது முற்றிலும் வர்த்தகக் குடியேற்ற ஆதிக்கம். நுண்ணிய இழைகளால் பின்னப்பட்ட ஒரு வலையைப் போல, உலகின் ஒவ்வொரு மூலையிலும் அமெரிக்க வர்த்தகக் குடியேற்றங்கள் தமது தடங்களை ஆழமாகப் பதித்திருக்கின்றன.

பிரகாசமான நியான் விளக்குகளும், வண்ணமயமான விளம்பரப் பலகைகளும் அமெரிக்கக் கலாசாரத்தின் தூதுவர்களாக நிற்கின்றன – மெக்டொனால்ட்ஸின் பொன்னிற வளைவுகள் முதல் ஸ்டார்பக்ஸின் பச்சைச் சின்னம் வரை.

அமெரிக்க உணவுப் பழக்கங்கள், ஆடை அணிகலன் முதல் போர்த்தளவாடங்கள் வரை – எல்லாமே விற்கப்படுகின்றன, அனைத்தும் லாபத்திற்காக. டாலர்தான் இன்று வரை எதிர்ப்பில்லா ராஜா, உலகப் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பு. வர்த்தகச் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த, திரும்பிவராது என்று தெரிந்தும் பில்லியன்கணக்கில் பண உதவிகளையும், மனித நேய உதவிகளையும் அமெரிக்கா செய்திருக்கிறது, செய்தும் வருகிறது. ஆனால் இந்தப் பளபளப்பான முகத்திற்குப் பின்னால் ஓர் இருண்ட உண்மை ஒளிந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!