உள்ளூர்க் கடனும் உலக பாதிப்பும்
கார்த்திக் ராஜாராம் தற்கொலை ஒரு புறம் என்றால், தமிழகத்தில் பல வீடுகளில் சின்ன சின்னதாய் இது வேறுவிதமாய் எதிரொலித்தது.
விடிகாலையில் வந்த ஃபோன்காலில் அந்த நடுத்தர வயதுப் பெற்றோர்கள் அதிர்ந்து போயிருந்தார்கள். அமெரிக்காவில் புது வீடு கட்டிக் குடிபோன பிள்ளையை விமானமேறிச் சென்று வாழ்த்தி விட்டு வந்து இன்னும் முழுதாய் ஒரு வருடம் கூட ஆகவில்லை.
“முப்பது வருஷம் மெதுவா, கொஞ்சம் கொஞ்சமா கடன் கட்டலாம். வட்டி இல்லாக் கடன் கொடுத்திருக்காங்க. பெஸ்ட் ஸ்கூல்ஸ் இருக்கிற இந்த மாதிரி ஏரியாவுக்கு இங்கே கிராக்கி ஜாஸ்தி. அதான் இங்கேயே புது வீடு வாங்கிட்டோம்.” என்று அப்போது சொன்னான் மகன். மருமகள் கூட ஆமோதித்துத் தலையாட்டினாள்.
இப்போது திடீரென்று கடன் கட்ட முடியவில்லை. வங்கியே வீட்டை அபகரித்துக் கொள்ளும் என்கிறான். என்ன நடந்தது? ஒன்றுமே புரியவில்லை.
“அமெரிக்கக் கனவு” என்ற சொல்லில் மயங்கி வீடு வாங்கியவர்கள் நிறைய பேர். வீட்டு வாசலில் காய்கறி விற்பது போல, வங்கிகள் தொலைப்பேசி வழியாகக் கடன் விற்றார்கள். வாடகைக் கட்டுவதற்குப் பதில் அதைவிடக் குறைந்த மாதத் தவணை, விற்கும்போது வீட்டின் மதிப்பு உயர்ந்திருக்கும், அதிலிருந்தும் பணம் சம்பாதிக்கலாம் என்று காட்டிய ஆசையில் “சப்-ப்ரைம்” கடனில் வீட்டை வாங்கினார்கள்.














Add Comment