உயிரா? உரிமையா?
அமெரிக்காவின் இரண்டாம் சட்டத்திருத்தத்தின்படி பொதுமக்களுக்குத் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமை எப்படி பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் ஆயுதமாக மாறுகிறது?
உலகில் பல நாடுகளில் குழந்தைகள் வறுமையால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் வேறு கவலை. நல்ல கல்வி வசதிகள் உள்ள நாடு. மாணவர்களுக்கு இலவசப் பேருந்து சேவையும், இலவசக் காலை உணவும் கிடைக்கின்றன. இருந்தும் தங்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து வீடு வந்து சேர்வார்களா என்பதுதான் பல பெற்றோர்களின் அன்றாடக் கவலை. ஆயுதங்களால் நடக்கும் வன்முறை உலகெங்கும் உண்டு. ஆனால் பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடப்பது அமெரிக்காவில் மட்டுமே அதிகம்.
டிசம்பர் 14, 2012. கனெட்டிகட் மாநிலம், நியூடவுன் நகரம். சாண்டிஹூக் எலிமென்டரி பள்ளியில் அந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது. 20 ஆண்டு இளைஞன் ஆடம் லான்சா தன் தாயைக் கொன்றுவிட்டு பள்ளிக்கு வந்தான். அவன் கையில் தானியங்கி ஆயுதங்கள் இருந்தன. பள்ளியில் காலை 9:30 மணிக்குக் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். அவனது துப்பாக்கிக் குண்டுகளுக்கு 20 சிறு குழந்தைகளும் 6 ஆசிரியர்களும் பலியானார்கள். அன்று கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களின் மனநிலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எல்லாம் 6, 7 வயதுக் குழந்தைகள். காலையில் பள்ளிக்கு ‘பை பை’ சொல்லிச் சென்றவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை.














Add Comment