இரண்டு பேர், ஒரே உண்மை
2010 மே 15ஆம் தேதி மாலை. நியூயார்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் வசித்த 16 வயது ஆப்பிரிக்க அமெரிக்கச் சிறுவன் கலீஃப் பிரவுடர், நண்பர்களுடன் விருந்துக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தான். திடீரென்று காவல்துறையினர் வந்து அவனையும் அவன் நண்பனையும் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் ஒருவருடைய பையைத் திருடியதாகவும், அவரை அடித்ததாகவும் குற்றம் சுமத்தினார்கள். கலீஃபிடம் எந்தப் பையும் கிடைக்கவில்லை. அவன் நண்பனை விட்டுவிட்டு, கலீஃபை மட்டும் கைது செய்தார்கள்.
காவல் நிலையத்தில் கலீஃபுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 3,000 டாலர் ஜாமீன் நிர்ணயிக்கப்பட்டது. அவன் குடும்பத்தால் ஜாமீன் தொகையைக் கட்ட முடியவில்லை. 74 நாட்களுக்குப் பிறகு அவனுடைய ஜாமீன் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இப்படித்தான் ஓர் அப்பாவி சிறுவன் அமெரிக்காவின் நீதி அமைப்புச் சுழலில் சிக்கினான்.
வழக்கு நீடித்தது. கலீஃப் முப்பத்தோரு முறை நீதிமன்றத்தில் ஆஜராகி, எட்டு வெவ்வேறு நீதிபதிகளின் முன் நின்றான். ஆனால் அவன் மீதான குற்றத்தை யாராலும் நிரூபிக்க முடியவில்லை. காரணம், அவன் திருடவே இல்லை. குற்றஞ்சாட்டியவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். வழக்கை முன்னெடுக்க எந்த ஆதாரமும் இல்லை.














Add Comment