Home » அமெரிக்க மாணவர் போராட்டம்: அது வேறு, இது வேறு!
உலகம்

அமெரிக்க மாணவர் போராட்டம்: அது வேறு, இது வேறு!

திருச்சி செயிண்ட் ஜோசஃப் கல்லூரி கிளைவ்ஸ் விடுதியில் மாணவர்கள் தடியடி பட்டதை தமிழ்நாட்டில் யாரும் இன்னமும் மறந்திருக்க மாட்டார்கள்.

25 வருடங்கள் முன் சீனாவில் டின்னமன் சதுக்கப் (Tinnamen Square) படுகொலைக்கு முன் நடந்தது மாணவர்கள் தலைமையிலான புரட்சிதான்.

அமெரிக்காவில் உரிமையியல் போராட்டம் நடக்கக் காரணமே சிகாகோவில் தொடங்கிய மாணவர்களின் எழுச்சிதான்.

அதேபோல இப்போது அமெரிக்காவில் பெரும்பான்மையான பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் நூறு இருநூறு பேராகத் திரள்கிறார்கள். கொலம்பியாவும் யேலும் பிரின்ஸ்டனும் ஹார்வர்டும் என எல்லா இடங்களிலும். இதுவரை பல்கலைக் கழகங்கள் தங்கள் பாதுகாவலர் அன்றி மாநிலக் காவலர்களை எதற்கும் அழைத்ததில்லை. முதன் முதலாக, இப்போது அழைத்திருக்கிறார்கள்.

செவ்வாயன்று மன்ஹாட்டனில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் “வெளிப்படுத்துங்கள், விலக்குங்கள், நாங்கள் நிறுத்த மாட்டோம், நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம்” (Disclose, Divest, we will not stop and we will not rest) என்று கோஷமிடத் தொடங்கினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!