கம்ப்யூட்டர் செய்வோமா?
வீட்டு வாடகைக்கே பணமில்லை. வாஸ்நியாக் கொடுத்த காசோலைகள் திரும்பி வந்திருந்தன. தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் இனி காசோலை வாங்கமுடியாது என்று மறுத்துவிடுகிறார். வாடகையைப் பணமாகத்தான் கொடுக்கவேண்டும் என்கிறார்.
நாமொரு நிறுவனத்தைத் தொடங்கலாமா என ஜாப்ஸ், வாஸிடம் கேட்டபோது இதுதான் அவர் சூழ்நிலை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருக்கும் ஒருவரை நிறுவனம் தொடங்க எப்படிச் சம்மதிக்க வைக்கமுடியும்?
ஜாப்ஸால் முடியும். என்ன கூறினால் வாஸ் ஒத்துக்கொள்வார் என்று அவருக்குத் தெரியும். பணம் என்னும் சொல்லையே ஜாப்ஸ் பயன்படுத்தவில்லை.பிரா இது ஒரு சுவாரசியமான பயணமாக இருக்கும். நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். நம் பெயர் சொல்ல ஒரு கம்பெனி இருக்கும் என்று வாஸுக்குப் பிடித்ததையெல்லாம் சொல்கிறார் ஜாப்ஸ். சரியென்று தலையசைத்துவிடுகிறார் வாஸ்.
என்னதான் திறமையாகப் பேசி வாஸைச் சம்மதிக்க வைத்துவிட்டாலும் பணம் வேண்டுமே? அதற்கென்ன செய்வது?















Add Comment