Home » Archives for முருகு தமிழ் அறிவன் » Page 2

Author - முருகு தமிழ் அறிவன்

Avatar photo

உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 42

42  தண்டபாணி தேசிகர் (27.08.1908 – 26.06.1972) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர். தமிழிசைத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. தமிழ்ப்பாடல்களைப் பாடுவதே கீழ்மை என்ற நோக்கு இருந்த காலங்களில் தமிழிசைப் பாடல்களைச் செல்லுமிடந்தோறும் பாடிப் பரப்பியவர்; பரவியவர். திருவையாற்றில் நிகழ்ந்து...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 41

41 ஞா. தேவநேயப் பாவாணர்  (07.02.1902 –  15.01.1981)     தமிழில் சொல்லாராய்ச்சித் துறையில் பெரும் பாய்ச்சலை முதலில் உலகுக்குக் காட்டியவர் என்று இவரைச் சொல்லலாம். சொல்லாராய்ச்சி ஒப்பீட்டில் 40மொழிகளின் சொற்களை ஒப்பிட்டுக் காட்டி இவரது கட்டுரைகள் அமைந்தன.  தமிழ் மறுமலர்ச்சிக் காலத்தின்...

Read More
உலகம்

சிங்கப்பூரின் புதிய அதிபர்: திறமைக்கு மரியாதை!

தமிழர் ஒருவர் சிங்கப்பூரின் புதிய அதிபராகியிருக்கிறார். தர்மன் சண்முக இரத்தினம். லீ க்வான் யூவைத் தவிர சிங்கப்பூரில் வேறெந்தத் தலைவரையும் அறியாததொரு தலைமுறை இங்குண்டு. அவர்களுக்கு இக்கட்டுரை பயன்படும். சிங்கப்பூர், ஆசியாவில் ஒரு அதிசயம். சின்னஞ்சிறியதாக, சென்னை நகரின் பரப்பளவை விடவும் சிறிது...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் 40

40 மயிலை சீனி.வேங்கடசாமி (16.12.1900 – 08.07.1980) ‘ஐந்தடிக்கும் உட்பட்ட குறள் வடிவம், பளபளக்கும் வழுக்கைத் தலை, வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக்காட்டும் அகன்ற நெற்றி, கனவு காணும் எடுப்பான மூக்கு, படபடவெனப் பேசத்துடிக்கும் எடுப்பான மெல்லுதடுகள், கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்குமுழ வெள்ளை...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 39

39 சாமி சிதம்பரனார்  (01.12.1900 –  17.01.1961) தாம் வாழ்ந்த அறுபது வருடங்களில் நாற்பது வருடங்களை மொழி மற்றும் சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டவர். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழிற்புரட்சியால் விளைந்த மாற்றங்களும் சமூகத்தில் பரவிய காலத்தில், தமிழிலக்கிய உலகின் மரபார்ந்த தன்மைக்குள்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 38

38  கி.ஆ.பெ.விசுவநாதம் (10.11.1899 – 19.12.1994) முத்தமிழான இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழின் காதலர் இவர். பின்னாட்களில் மூன்று தமிழுக்கும் காவலர் என்ற பெயரில் ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற புகழ்ப்பெயரை அடைந்தவர். தொழிலால் வணிகர்; ஆனால் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்தது அவரது பொதுப்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 37

37 சுவாமி சித்பவானந்தர்  (11.03.1898 – 16.11.1985) அவரது பணி ஆன்மீகத்தில்தான். துறவி வாழ்வை மிக இள வயதிலேயே விரும்பி ஏற்றுக் கொண்டவர். பெயர் சொன்னால் போதும், அவரது புகழ் எத்தனை பெரிது என்று தெரியக்கூடிய ஒரு மனிதர்தான். ஆனால் அவரது பணி துறவு ஒன்றில் மட்டும் நின்றுவிடவில்லை. கல்விப்பணி, எழுத்துப்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 36

36  ரா.பி.சேதுப்பிள்ளை (02.03.1896 – 25.04.1961) கம்ப இராமாயணத்தில் கம்பர் ‘சொல்லின் செல்வன்’ என்ற அடைமொழியை ஒரு பாத்திரத்துக்குக் கொடுத்தார். கம்ப காப்பியத்தின் வழி அப்பாத்திரத்தின் சொல்வன்மைக்கும், அறிவு மேன்மைக்கும் பொருத்தமானதே அந்த அடைமொழி. கம்பனின் படைப்பான அனுமனே அந்தப் பாத்திரம்...

Read More
Uncategorized உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 35

35 வெ.சாமிநாத சர்மா  (17.09.1895 –  07.01.1978) அவரது வாழ்வு தொடங்கியதே பத்திரிகையாளராகத்தான். சிறிது குள்ளமான சிவந்த உருவம். இராசகோபாலாச்சாரி போல எப்போதும் மொட்டைத் தலை. கதரில் குப்பாயச் சட்டையும், வேட்டியும். சாயலில் திருவிக போன்ற தோற்றம். மாறாத புன்னகை. பார்த்தாலே துலங்கிவிடும் அறிஞர்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 34

34 சி.வை.தாமோதரம் பிள்ளை (12.09.1832 –  01.01.1901)  ஈழத்துத் தமிழறிஞர்கள் என்று சொல்லும் போது உடனே நினைவில் தோன்றக்கூடியவர்களுள் ஒருவர் பதிப்புச் செம்மல் சி.வை. தாமோதரம் பிள்ளை. ஈழத்தின் உ.வே.சா. என்றும் அவரைச் சொல்வார்கள். உ.வே.சா. செய்ததை, உ.வே.சா’வுக்கும் முன்பு இருந்து செய்தவர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!