பெரும்பாலானவர்கள் முதுமையில் தளர்வை நோக்கி நகர்கிறார்கள். மாறாக, தனது கனவுகளை உற்சாகமாகத் துரத்துகிறார் இந்தியாவின் முதிய எம்பிஏ பட்டதாரி உஷா ரே. தனது எண்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில வாரங்களில் எம்பிஏ இறுதி செமஸ்டரை எழுதினார் மாணவி உஷா ரே. இவர் மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மையில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
புனேயில் உள்ள டாக்டர் டி. ஒய். பாட்டீல் வித்யாபீடத்தில் ஆன்லைன் திட்டத்தில் எம்பிஏ சேர்ந்த போது உஷா ரேவுக்கு வயது எழுபத்தேழு. அதற்கு முன்பு கல்வியாளராகவும் மேலாண்மை நிர்வாகியாகவும் பணிபுரிந்தது வந்தார். எம்பிஏ சேர்ந்த பிறகு அதுவரை இல்லாத புத்துணர்வும், அறிவுத் தேடலில் கிடைக்கும் அமைதியும் அவருக்குக் கிடைத்துள்ளன. அனுபவம் வாய்ந்த ஆசிரியரிலிருந்து முதலாம் ஆண்டு மாணவராக மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதைப் போல உணர்ந்தார்.
உஷா ரேயின் வாழ்க்கை முழுவதும் கல்வி அவருடைய அடையாளமாக இருந்துள்ளது. 1966இல் விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 1978இல் கல்வியியலில் பட்டம் பெற்றுள்ளார். இங்கிலாந்திலும், ஏமனிலும், பின்னர் அவர் பிறந்த லக்னோவிலும் பல ஆண்டுகள் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 2009இல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.















Add Comment