Home » ஏன் விழுந்தது காங்கிரஸ்?
இந்தியா

ஏன் விழுந்தது காங்கிரஸ்?

இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் சுதந்தரப் போராட்டத்திலும் இந்தியர்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு அரசியல் இயக்கம். சுதந்தரத்துக்குப் பிறகு சுமார் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், இன்று ஒருசில மாநிலங்களுக்குள் சுருங்கியுள்ளது. காங்கிரஸ் எனும் மாபெரும் கோட்டை எப்படி உடைந்தது என்பதைப் புரிந்துகொள்ள, அந்தக் கோட்டை எப்படிக் கட்டப்பட்டது என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

​ஆரம்பத்தில் மேட்டுக்குடி இந்தியர்களுக்கும்  அரசாங்கத்துக்கும் இடையே அரசியல் உரையாடலுக்கான ஒரு தளமாகவே காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. 1920ஆம் ஆண்டு நடைபெற்ற நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களின் மூலம் காங்கிரஸ் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியது.

​உறுப்பினர் கட்டணம் ஆண்டுக்கு வெறும் 4 அணாவாக (25 பைசா) குறைக்கப்பட்டது. மொழி அடிப்படையில் மாகாண கமிட்டிகள் பிரிக்கப்பட்டன. இது அவரவர் தாய்மொழியில் அரசியல் பேச உதவியது. கிராமப் பஞ்சாயத்து, தாலுகா, மாவட்டம், மாகாணம், தேசிய கமிட்டி என பிரமிடு போன்ற கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனநாயக முறைப்படி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது காங்கிரஸ் தலைமைக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கியது. காங்கிரஸ் கோட்டையின் முதல் தூண், இந்த ஜனநாயக அடிப்படையிலான வலிமையான உள்கட்டமைப்புதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Nandagopal Daivasigamani says:

    இதில் சோகமான விஷயம் என்னவென்றால், இங்கு இருப்பவர்களுக்கு இன்று இருக்கும் காங்கிரசும் ஸ்தாபன காங்கிரசும் வேறு என்பது தெரியாமல் இருப்பதுதான்.
    இந்திரா காங்கிரஸ், காமராஜரை கட்சியில் இருந்து நீக்கியதும் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்து, ‘இந்திரா காங்கிரஸ்’ உருவாகி ஆட்சியைப் பிடித்தது. பின்னாளில் காமராஜர் இறந்ததும், அதன் தலைவருக்கு கவர்னர் பதவியைக் கொடுத்துத் தன் கட்சியை அதில் இணைத்துக் கொண்டார் இந்திரா காந்தி அம்மையார். ஆனால், வினோதமாகப் புதிய கட்சிக்குத் தன் கட்சிப் பெயரைத் தொடராமல் இணைந்த கட்சியின் பெயரையே வைத்துக் கொண்டார். இதற்கு, அந்தக் கட்சியின் சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்யா விட்டால் போய் விடும் என்பது காரணமாக இருக்கலாம் என்ற வதந்தியும் உண்டு. ஸ்தாபன காங்கிரஸில் இருந்த பழைய தலைவர்களும், பழைய கோட்பாடுகளும் புதிய இந்திரா காங்கிரஸ் தோன்றிய போது இல்லை(விலகித் தொலைவில் போய் விட்டார்கள்) என்பது கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
    அதனால், “ஏன் இத்தனை பாரம்பரியம் கொண்ட கட்சி இந்த நிலையில் இருக்கிறது?” என்ற கேள்வியே தேவையற்ற பிடுங்காத ஆணி என்பது என் கருத்து.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!