பம்பாய்ச் சட்டப் பேரவையில் அதிகபட்சம் மூன்றில் ஒரு பங்குப் பேர் இந்தியர்களாக இருக்கலாம். மீதமுள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் வெள்ளைக்காரர்கள்தான்.
Author - என். சொக்கன்
![]()
பிளேக் தாக்குதலின்போது கோகலேவின் சேவையும் உழைப்பும் மக்களை வியப்பில் ஆழ்த்தின. அரசாங்க அலுவலர்கள்கூட அவரை வெளிப்படையாகப் பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்.
கோகலேவின் பெயர் படிக்கப்பட்டபோது பெரும் பரபரப்பு கிளம்பியது. காங்கிரஸ் பிரதிநிதிகளில் சிலர் அவரை இழிவுபடுத்திக் கூக்குரல் எழுப்பினார்கள், 'துரோகி' என்று கூச்சலிட்டார்கள்.
கோகலேவின் நெருங்கிய நண்பர்கள், அவருடைய மனத்தைப் புரிந்துகொண்ட ஒரு சிலரைத் தவிர, ஒட்டுமொத்த நாடும் அவருக்கு எதிராகத் திரும்பியிருந்தது.
'வேறு வழியில்லை. நான் சொன்னதையெல்லாம் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று மன்னிப்பு கேட்டுவிடுங்கள்' என்று கோகலேவுக்கு அறிவுரை சொன்னார் ரானடே.
திலகர் காந்தியை வியப்புடன் பார்த்தார், 'உங்களுக்கு இந்திய அரசியல் இன்னும் சரியாகப் புரியவில்லை' என்றார், 'புணேவில் சார்வஜனிக் சபா, டெக்கன் சபா என்று இரண்டு அமைப்புகள் உள்ளன.
பல முன்னோடிகள் சிரமப்பட்டு உண்டாக்கிய இந்திய விடுதலைப் போராட்ட முன்னெடுப்புகளைத் தன்னுடைய சிறு பிழை உடைத்துப்போட்டுவிட்டதாக எண்ணிக் கோகலே வருந்தினார்.
புனே பிளேக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப்பற்றி யாரோ எழுதிய கடிதங்களைக் கோகலே முற்றிலுமாக நம்பிவிட்டார், அதன் அடிப்படையில் ஒரு கருத்தை உருவாக்கிக்கொண்டுவிட்டார்.
தன் குழுவினர்மீது எழுப்பப்பட்ட எந்தக் குற்றச்சாட்டையும் ரான்ட் பொருட்படுத்தவில்லை, அக்கறையான சில சொற்களைக்கூடப் பேசவில்லை, தான் செய்வதுதான் சரி என்பதுபோல் நடந்துகொண்டார்.
கோகலே பல ஆண்டுகளுக்கு எவ்வளவோ பொறுமையாக எடுத்துச்சொன்னபோதும் அவருடைய நண்பர்களோ மற்றவர்களோ இந்த நேர ஒழுங்கைக் கடைப்பிடிக்கவில்லை.












