குண்டான உருவம். அதைப் போர்த்தி சுற்றப்பட்ட கம்பளி. ஒருக்களித்துப் படுக்கவோ அல்லது சம்மணமிட்டு அமரவோ மெத்தை விரிக்கப்பட்ட ஒரு கட்டில். கேள்வி கேட்பவர்களுக்கு ஆழ்ந்த மௌனம். சினேகமாக ஒரு பார்வை. தோளில் ஒரு தட்டு. இவைதான் நீம் கரோலி பாபாவின் அடையாளங்கள். அற்புதங்களின் சங்கமம் என்று இவரைப் பற்றிக்...
Author - நா. மதுசூதனன்
வேகமாக நடந்தால் ஐந்து நிமிடங்களில் கடந்து சென்றுவிடக்கூடிய ஓர் ஊர். அளவான மக்கள் நெருக்கம். பத்து, பதினைந்து உணவகங்கள். அதே அளவு தங்கும் விடுதிகள். பெரும்பாலும் ஹோம்ஸ்டே என்று சொல்லப்படும் வகையிலானவை. வரும் பக்தர்கள்தாம் இவர்களின் ஆதாரம். ஆனால் பக்தர்களுக்கு இந்த ஊரில் வீற்றிருக்கும் ஜாகேஷ்வர்தான்...
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வீரர்களை அரசு அனுப்பும். சம்பளத்தை விஜய் தருவார் என்பது ஏற்பாடு. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், முக்கியமான பிரமுகர்கள், நடிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு...
இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் கடந்த சனிக்கிழமை, ஜனவரி 25ஆம் தேதியன்று காலமானார். அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக மருத்துவத் துறையில் பல சாதனைகள் செய்து, பல உயிர்களைக் காப்பாற்றியவர். தான் ஒரு கருவி மட்டுமே எனத் தன் வாழ்வைக் குறிப்பிட்டவர். “திருப்தி ஆயி” என்கிற தன்...
விபத்து நடந்து நாற்பதாண்டுகளுக்குப் பிறகு போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் பணி ஜனவரி கடந்த வாரம் தொடங்கியது. முழுவதுமாகச் சீல் வைக்கப்பட்ட பெரிய கன்டெயினர் லாரிகளில் போபாலிலிருந்து இருநூற்றைம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிதாம்பூர் என்ற பகுதிக்குக் கொண்டு...
2024-க்கு ஒரு நோக்கம் வேண்டாமா?. நாற்பது கட்டுரைகள். ஒரு தொடர், ஒரு புத்தகம் இது தான் எனது தற்போதைய எண்ணம். இதைத் தவிர வாங்கி வைத்துள்ள புத்தகங்கள், குறைந்தது இன்னும் ஐந்து முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து முடிக்க வேண்டும். சென்ற ஆண்டு ஆரம்பத்தில் முதல் ஆண்டறிக்கை எழுதியபோது இப்படித்...
ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில், மந்த்ராலயம். தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்றவற்றிலிருந்து மந்த்ராலயத்தை அடையப் பன்னிரண்டிலிருந்து பதினேழு மணி நேரம் வரை ஆகும். நேரடியாகப் போகும் ரயில்கள் குறைவாக இருப்பதால் மும்பை செல்லும் ரயில்களை நம்பியே இருக்க...
வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ்(80) கடந்த ஞாயிறன்று காலமானார். “உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. கஷ்டப்படவும் இல்லை கஷ்டம் கொடுக்கவும் இல்லை” என்று அவரது மருமகன் சதீஷ் நாராயணன் சொன்னார். “சனியன்று இரவு கூட வழக்கம்போலப் பேசிக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு...
தீபாவளியையும் தலைநகர் தில்லியில் காற்று மாசுபடுதலையும் பிரிக்க முடியாது. இந்த ஆண்டு, தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் தில்லியின் காற்று தரக் குறியீடு (AQI) சில இடங்களில் நாநூறுக்கும் அருகில் வந்து விட்டது. அதிகபட்சமாக 446 என்ற நிலையை எட்டியது. முக்கிய இடங்களில் தெரிவுநிலை (VISIBILITY) பத்து...
“மதச்சார்பற்ற, ஊழலற்ற அரசியல் தான் எங்கள் நிலைப்பாடு. கரப்ஷன் கபடதாரிகளின் மோடி மஸ்தான் வேலை எங்களிடம் எடுபடாது” என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி வி சாலையில் ஞாயிறன்று நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கட்சியின் கொள்கைகளை...