Home » ஒரு கிலோ மீட்டருக்கு 1.34 புண்ணியத் தலங்கள்!
சுற்றுலா

ஒரு கிலோ மீட்டருக்கு 1.34 புண்ணியத் தலங்கள்!

குருக்ஷேத்திரம். மகாபாரதப் போர் நடந்த இடம். பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசித்த தலம். அர்ஜுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்த இடம். புண்ணிய நதிகளான சரஸ்வதியும் திருஷ்டவதியும் இணையும் இடம். குரு என்ற மன்னன் ஆண்ட நகரம்.

இந்த இடத்தின் பெருமையை உணர்த்துவது போல கீதையின் முதல் ஸ்லோகமே ‘தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:’ என்று தொடங்குகிறது. ஹரியானாவில் உள்ள கர்னல்/கைதல் மாவட்டங்களுக்கு இடையே, பத்து லட்சம் மக்கள்தொகையுள்ள சிறிய நகரம். விவசாயம், பக்திச் சுற்றுலா மட்டுமே இங்கு பிரதானம்.

ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து சகஸ்ரநாமம், பகவத்கீதா பாராயணம் செய்து வரும் கிருஷ்ணாமிர்தம் என்ற குழுவின் சார்பாகக் கடந்த வாரம் இருபத்து மூன்று பேர் இங்கு தலப் பிரயாணம் கிளம்பினோம். கீதையும் சகஸ்ரநாமமும் ஜனித்த இடத்தில் அமர்ந்து அதைப் பாராயணம் செய்வதே நோக்கம். இரண்டு நாள் பயணமாக அமைத்துக் கொண்டோம். மதுரை-சென்னை-சண்டிகர் விமானம். சண்டிகரிலிருந்து சாலைவழிப் பயணம். ஷாஹீத் பகத்சிங் விமான நிலையத்திலிருந்து குருக்ஷேத்திரம் சென்றடைய இரண்டு மணிநேரம் ஆகும். ஆறுவழிச்சாலை, ஆனாலும் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!