Home » Archives for பத்மா அர்விந்த்

Author - பத்மா அர்விந்த்

Avatar photo

சமூகம்

உன்னை நான் அறிவேன்! – நாட்டு மக்களுக்கு ஒரு நவீன குடைச்சல்

அமெரிக்க குடியுரிமை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம், நிரந்தரக் குடியுரிமை மற்றும் பணியாளர், மாணவர் கடவுச்சீட்டில் உள்ளோர் அனைவரும் தங்கள் சமூகவலைத்தள கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது. மேற்பார்வையிடுவது ஒன்றும் புதிய கலாசாரம் இல்லை. காவலர்கள் கண்காணிக்காதபோது வேகத்தடையை மீறாத...

Read More
கிருமி

அமெரிக்காவில் அம்மை நோய்

தடுப்பூசி போட்டால் வராமல் தடுக்கக்கூடிய நோய் தாக்கி, அமெரிக்காவில் மூன்று பேர் இறந்துபோயிருக்கிறார்கள். அதில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். அமெரிக்காவில் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஒரு நோய் இது. பல ஏழை நாடுகளில் உணவுக்கே அல்லல்படும் மக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள இயலாததால், இந்த நோய் பரவுகிறது...

Read More
ஆளுமை

எலான்களின் உலகம் : 15 மைனஸ் 3

எலான் மஸ்க் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்படாத அதிபர். அவருடைய ஆசை உலகை நவீனத் தொழில் நுட்பங்களால் செதுக்கி எவ்வளவு துரிதப்படுத்தப் படுத்தமுடியுமோ அவ்வளவு துரிதப்படுத்த வேண்டும். பிழையே இல்லாத இயந்திரங்களால் உலகை இயக்க வேண்டும். நவீன உலகச் சிற்பியாக வேண்டும். ஆனால் அந்த நவீன உலகில் மனிதர்கள் இருக்க...

Read More
இந்தியா

மோடியின் அமெரிக்கப் பயணம்: உண்மையில் நடந்தது என்ன?

மிகப் பெரிய மக்களாட்சியின் தலைவர் தானாகவே விரும்பிக் கேட்டுக்கொண்டு அமெரிக்க அதிபரைச் சந்திக்க வந்து சென்றார். இதைத்தான் வெற்றிகரமான பயணமாக நமது ஊடகங்கள் கொண்டாடுகின்றன. அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு மோடிக்கு அழைப்பிதழ் இல்லை. அனைத்துத் தூதரகங்களுக்கும் அமெரிக்க மரபின்படி அனுப்பப்பட்டது...

Read More
உலகம்

யார் இந்தத் துளசி?

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துளசி கப்பார்ட், புலனாய்வுத்துறையின் முதல் பெண் தலைமை அதிகாரி ஆவார். முதல் இந்து மதத்தை சேர்ந்த அதிகாரி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இவர் இந்திய வம்சாவளியினர் அல்ல, இந்து மதத்தைத் தழுவிக்கொண்டவர். செனேட்டில் நடந்த தீவிர...

Read More
உலகம்

குடியேற வழியில்லாக் குழந்தைகள்

அமெரிக்காவுக்குப் பலவகை கடவுச்சீட்டுகளில் வருபவர்கள் முறையாகப் பணி செய்து அரசுக்கு வருமான வரி செலுத்தி வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் குழந்தைகள் இங்கே அரசால் பெறும் சலுகைகள் குறித்து அரசாங்கத்துக்கோ மக்களுக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி அமெரிக்காவில் நுழையும் மக்கள், கடவுச்சீட்டுக்...

Read More
உலகம்

கையெழுத்தும் தலையெழுத்தும்

ஒரு கையெழுத்து பல கோடி மக்களின் தலையெழுத்தை ஒரே வாரத்தில் புரட்டிப் போட்டிருக்கிறது. இப்படி நடக்கும் என்று தெரிந்தே, சிறிது கூட கவலையோ பரிதவிப்போ இல்லாமல் அதைச் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர். சென்ற வருடத்தில் மட்டும் அமெரிக்கா, தன் பன்னாட்டு நிறுவனத்தின் (USAID) மூலம் $7.2 பில்லியன் பணத்தை...

Read More
உலகம்

டிரம்ப் என்றால் தடாலடி: பனாமா கால்வாய் விவகாரத்தின் பின்னணி அரசியல்

பனாமா கால்வாய் விவகாரம், தேர்தல் பரப்புரைகளின் போதே சொன்னதுதான். சொன்னதைச் செய்வேன் செய்வதைத் தான் சொல்வேன் என்பதற்கு இலக்கணம் அதிபர் டிரம்ப். வால்ஸ்டிரீட் பத்திரிகையே சொல்கிறது இவர் ஒரு முரட்டுப் பிடிவாதக்கார, புரிதலும் பரிவும் இல்லாத அதிகாரம் கொண்ட அதிபர் என்று. ஒரு வாரத்தில் அமெரிக்காவே ஆட்டம்...

Read More
உலகம்

அச்சம் தவிர் : அமெரிக்க விசா வதந்தி

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலாக வதந்திகள் புற்றீசல்கள் போலத் தோன்றுகின்றன. குடியேற்றக் கடவுச்சீட்டுகள், பணியாளர் விசாக்கள் (h1b) எனத் தொடங்கி இப்போது மாணவர் விசாக்களுக்கு (F1) வந்திருக்கிருக்கறார்கள் வதந்தி உற்பத்தியாளர்கள். விவாத மேடைகளில் கமலாஹாரீஸ்...

Read More
மருத்துவ அறிவியல்

எலும்பை எண்ணி எண்ணி…

முதுமை அடைவதன் அடையாளங்களில் ஒன்று கேட்கும் திறன் குறைந்து போவது. அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்ளும் உறவுகளே அதிகம். இது சமூக, குடும்ப உறவுகளை நீக்கித் தனிமைப்படுத்துகிறது. பேசுவது குறைந்து, மன அழுத்தம் போன்ற பல மன நோய்களுக்கும் மறதி நோய்களுக்கும் காரணமாகிறது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!