எலனார் ரூஸ்வெல்ட்
அமெரிக்காவின் மிக நீண்ட கால அதிபரின் மனைவியாக மட்டுமல்லாமல், தனது சொந்த அடையாளத்துடன் வரலாற்றில் இடம்பெற்ற தனித்துவமான பெண்மணி எலனார் ரூஸ்வெல்ட். சமூக நீதி, மனித உரிமைகள், பெண்களின் சமத்துவம் ஆகியவற்றுக்காக அயராது உழைத்தவர்.
1884ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நியூயார்க் நகரின் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் எலனார் ரூஸ்வெல்ட். இவரது தந்தையார் எலியட் ரூஸ்வெல்ட், தாயார் அன்னா ஹால். இவரது மாமா டெடி ரூஸ்வெல்ட் (தியோடர் ரூஸ்வெல்ட்) அமெரிக்காவின் 26வது அதிபராக 1901-1909 வரை பணியாற்றினார். இவரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.
இளம் எலனார், உடல் ரீதியாக அவ்வளவு அழகானவராக இல்லை என்று அவரது பாட்டியும் தாயாரும் தொடர்ந்து ஏளனம் செய்தனர். ‘சிறிய பாட்டி’ என்ற செல்லப்பெயரில் அழைக்கப்பட்ட எலனார், குடும்பத்தில் உணர்வு ரீதியாக ஒதுக்கப்பட்டவராக வளர்ந்தார். இந்த அனுபவம் இவரது வாழ்நாள் முழுவதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
















Add Comment