Home » இனிய இல்லத்தரசி
கிச்சன் கேபினட்

இனிய இல்லத்தரசி

மேமி ஜெனிவா டௌட் எய்ஸன்ஹோவர்

மேமி ஜெனிவா டௌட்

செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் ஒரு சாதாரணப் போர்வீரனை மணந்து, பிறகு கணவனின் உந்துசக்தியாக இருந்து அவரை நாட்டை ஆளும் அதிபராக்கியவர் மேமி ஜெனிவா டௌட் எய்ஸன்ஹோவர்.

அயோவா மாநிலத்தில் 1896ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்த மேமி , இறைச்சித் தொழிலில் பெரும் வெற்றி பெற்ற ஜான் ஷெல்டன் டௌட்டின் மகள். தாய் எலிவெரா கார்ல்சன். மேமியின் தந்தை 36 வயதிலேயே ஓய்வு பெறும் அளவுக்குச் செல்வந்தராக இருந்தார். கொலராடோவின் டென்வரில் அரண்மனை போன்ற வசிப்பிடம், பணியாட்கள், குளிர்காலத்தில் டெக்சாஸின் சான் அன்டோனியோவில் விடுமுறை என மேமியின் இளமைப் பருவம் ஓர் இளவரசிக்கு ஒப்பானது. எனினும், அக்காவின் மரணம் மற்றும் தனது உடல்நலக் குறைபாடுகளால் அவர் வாழ்நாள் முழுதும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

சான் அன்டோனியோவில் விடுமுறையின்போது, இளம் போர்வீரரான ட்வைட் டேவிட் எய்ஸன்ஹோவரை (ஐக்) சந்தித்தார். வெஸ்ட் பாயின்ட் ராணுவக் கல்லூரியில் பட்டம் பெற்றிருந்த 25 வயது ஐக், 19 வயது மேமியைச் சந்தித்த முதல் கணமே காதல்வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!