நாட்டின் பதினைந்தாவது குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன் என்கிற சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். அமைதியான அரசியல்வாதி, ஆனால் அவ்வப்போது சர்ச்சையாகப் பேசி மக்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பக் கூடியவர். ஆர்எஸ்எஸ் தொண்டர், பாஜக உறுப்பினர், இரண்டு முறை...
Author - பிரபு பாலா
![]()
கடந்த மாத இறுதியில் ‘ஆஸ்திரேலியாவுக்காக அணிவகுப்பு’ (March for. Australia) என்ற பெயரில் குடியேற்றத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் பிரசாரம் பெரும்பாலும் இந்தியர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது. இந்தியர்கள் அதிகமாகக் குடியேறுவது ஆஸ்திரேலிய...
மராட்டியச் சமூக இடஒதுக்கீடு தொடர்பாகக் கடந்த வாரம் சுமார் நாற்பதாயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு மும்பை நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். அதைத் தொடர்ந்து, தகுதியான மராட்டியர்களுக்குக் குன்பி (Kunbi) சாதிச் சான்றிதழ் வழங்குவது உள்பட அவர்களின் முக்கியக் கோரிக்கைகள் சிலவற்றை மகாராஷ்டிரா அரசு ஏற்றுக்...
உலகின் கனிவான நீதிபதி என்று பெயர் பெற்ற பிராங்க் (பிரான்சிஸ்) காப்ரியோ அவருடைய எண்பத்தெட்டாவது வயதில் காலமானார். அவர் இறந்த செய்தி வெளியான ஐந்து மணி நேரத்தில் அதை உறுதி செய்ய இருபதாயிரம் பேர் கூகிள் ட்ரென்ட்ஸ்ஸில் தேடியுள்ளனர். அந்த அளவுக்கு மக்களிடையே நற்பெயரும் புகழும் பெற்றிருந்தார். கடந்த சில...
உலகின் சிறந்த ஏழு கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார் இந்திய விஞ்ஞானி குருதேஜ் சிங் சாந்து. செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் அவரது கண்டுபிடிப்புகள் 1,382 அமெரிக்கக் காப்புரிமைகளை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. அமெரிக்காவில் அதிகமான காப்புரிமைகளைப் பதிவு செய்து வைத்திருந்தவர் தாமஸ்...
தமிழக அரசும், மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா, சிக்கய்ய கல்லூரியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கி பன்னிரண்டு நாள்கள் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று அரங்கம் அமைத்த புத்தக விற்பனையாளர்கள்...
இந்தியாவில் தற்போது பிரபலமாகப் பேசப்படுபவர்களில் ஒருவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தேடு பொறி பெர்பிளக்ஸிட்டி (Perplexity) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. முப்பதொரு வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்பிளக்ஸிட்டியின் நிறுவனர். சென்னையைச் சேர்ந்த தமிழர்...
வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது அமலாக்கத்துறை முதல் முறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு வாத்ராவுக்குச். சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மூலம் ஹரியானா மாவட்டத்திலுள்ள குருகிராம் பகுதியில் மூன்றரை ஏக்கர்...
நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக். கல்லூரிகள் லஞ்சம் கொடுத்து போலி ஆவணங்கள், மோசடி ஆய்வுகள் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
தென்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பாஜக தேசியத் தலைவராக நியமிக்க ஆர்எஸ்எஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












