மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. புதிய தலைவராக ஒரு பெண்ணை நியமிக்க பாரதிய ஜனதா கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த பாஜக முக்கியப் பெண் உறுப்பினர்கள் மூன்று பேர் தலைவருக்கான போட்டியில் உள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜேபி நட்டா தற்போது பாஜகவின் தலைவராக உள்ளார். 2020ஆம் ஆண்டு கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2023ஆம் ஆண்டுடன் இவருடைய பதவிக் காலம் முடிவடைந்தது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குக் கட்சியை வழி நடத்தும் வகையில் இவருடைய பதவிக் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு உள்கட்சித் தேர்தல் நடத்தி மாநில, மாவட்டத் தலைவர்களை பாஜக தேர்ந்தெடுத்தது. இருபத்தெட்டு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் நடத்தி, அவற்றில் பத்து மாநிலங்களில் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.















Add Comment