தமிழ்நாடு தொல்லியல் துறை, 2026 நிதிநிலை அறிக்கையில் எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சிக்காக நிதி ஒதுக்கியிருக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளுடன் பட்டுவழிப் பாதையில் புதிய தேடலுக்காக இலக்கு வைத்திருக்கிறது. இப்பாதை முசிறி, புகார் தொடங்கி கரூர், மதுரை, காஞ்சி, தர்மபுரி (தகடூர்) வழி தக்காணம் வரை நீள்கிறது. NH7 இதன் மேல்தான் அமைந்திருக்கிறது.
கரூர் இதன் நடுவம். துல்லியமாய், தமிழகத்தின் புவியியல் மையம். நான்கு திசைகளில் இருந்தும் சம தூரம்.
மனித வரலாற்றில் நகரங்கள் உயிர்களைப் போலப் பிறந்து வளர்ந்து மூப்படைகின்றன. சிந்து சமவெளியின் மொஹெஞ்சதாரோவும், ஹரப்பாவும் தற்போது புவியில் இல்லை. மகாபாரதம் சொல்லும் ஹஸ்தினாபுரமும் இந்திரப்பிரஸ்தமும் இப்போது தலைநகரங்கள் அல்ல. சிலப்பதிகாரம் சொல்லும் பூம்புகார் இன்று ஆள்நடமாட்டமற்ற மயிலாடுதுறைக் கடற்கரை.
சென்ற இரண்டாயிரம் வருடங்களை நான்காகப் பிரித்தால், நகர வரிசை மாறியபடி இருக்கிறது. முதல் ஆயிர வருட இந்திய வரைபடத்தில் இன்றைய பெருநகரங்கள் எதுவும் இல்லை. கரூர் இருந்தது, ஆனால் அது நிறுவப்பட வேண்டியிருந்தது.















Add Comment