Home » முடியாப் பெருந்துயரம்
உலகம்

முடியாப் பெருந்துயரம்

2023 அக்டோபர் 7, காஸா போர் தொடங்கிய நாள். 2025 அக்டோபர் 10, அந்தப் போர் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நாள். இரண்டுக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் கடந்து, அதன் பிறகு மேலும் ஓராண்டு கடந்துவிட்டது. ‘முடிந்தது’ என்று சொல்லப்பட்ட ஒரு போர், அதன் பின்னும் ஆயிரத்து நானூறு உயிர்களைக் குடித்திருக்கிறது என்றால் போர் நிறுத்த அறிவிப்பு பொய் சொல்கிறதா?

காஸாவில் இன்று தேதிகளுக்கு எவ்வித அர்த்தமுமில்லை. அங்கே நாட்கள் வெறும் உயிர்பிழைத்த இரவுகளின் எண்ணிக்கை மட்டுமே. அந்த எண்ணிக்கையின் மூன்றாம் ஆண்டு நிறைவின் நினைவுகளுடன் இன்னும் அமைதியைத் தேடிக் கொண்டிருக்கிறது அந்தப் பாவப்பட்ட நிலம்.

மத்தியத் தரைக் கடலோரத்தை ஒட்டி அமைந்திருக்கும் மெல்லிய நிலப்பட்டைதான் காஸா. பரப்பளவு ஏறத்தாழ 365 சதுர கிலோமீட்டர். சென்னை மாநகரை விடச் சிறிய இந்த நிலத்தில், போருக்கு முன் சுமார் இருபத்து நான்கு லட்சம் மக்கள் வாழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் 1948இல் இஸ்ரேல் நாடு உருவான காலத்தில், நக்பா எனப்படும் பேரிடர் வேளையில் தங்கள் ஊர்களை இழந்த அகதிகளும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஆவர். இங்குள்ள பாட்டிகளின் கதைகளில் இன்றும் அவர்கள் இழந்த கிராமங்களின் பெயர்கள் உயிர்ப்புடன் உலவுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!