Home » உரி – 187
உரி • நாள்தோறும்

உரி – 187

187. இல்லாதிருப்பவன்

உன் பிராயமென்ன? முந்நூறுக்கு மேலே என்றறிவேன். முந்நூற்றைம்பதா, அதற்கும் மேலா? எண்ணிப் பார்த்தால் குறிப்பிட்ட பிராயத்துக்கு மேலே உயிர் சுமந்திருப்பது நாணம் கொள்ள வேண்டியதொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆகக் குறைந்தபட்சம் அத்தனையாண்டுக் காலம் வாழ்ந்து வந்திருப்பதன் சாரமாக ஏதேனும் ஒரு நற்செயலைச் சுட்ட முடியுமானால்கூடப் போதும். அது ஊருக்கும் உலகுக்கும் உதவக்கூடியதாகக் கூட இருக்க வேண்டாம் வேட்டனே. நீ விரும்பும் உன் உடலம், உன் சிந்தை, உன் உயிரின் தரிப்புக்கு நியாயம் சேர்க்கும் விதமாக ஒன்றைச் சொல். தெரிந்துகொள்ள ஆவலாயிருக்கிறேன்,

என்று சார்வாகன் சொன்னான். வேட்டன் அமைதியாக இருந்தான். அவனது பார்வை சார்வாகனிடமிருந்து நகரவேயில்லை. கண்ணிமைக்கவும் செய்யாமல் நெடுநேரமாக அவனையேதான் உற்று நோக்கிக்கொண்டிருந்தான்.

உனக்கோர் இலக்கு இருக்கும். இல்லாது போனால் இத்தனை விபரீதங்களைத் தனியொரு மனிதன் தனது சிந்தைக்குள் கருக்கொண்டிருக்க முடியாது. சொல், யாரை வெல்ல வேண்டும்? அல்லது எதனை அழிக்க வேண்டும்? வெறும் ஒரு அருமொழி என்றோ, இக்கற்றளியென்றோ சொல்லாதே. அது பொய்யென நானறிவேன். வேறெதற்கும் இல்லாவிட்டாலும் உன் முந்நூறு பிராயத்துக்கேனும் மரியாதை கொடுத்து உண்மையைச் சொல்.

இப்போதும் வேட்டன் பேசவில்லை. அவனது பார்வையும் திசை மாறவில்லை. இப்போது உதுமானி நாயனார் பேசினார்.

அவன் அறிந்துகொள்வதன் பொருட்டுக் கேட்கவில்லை வேட்டனே. ஏனெனில் உன்னைக் குறித்து நீ அறிந்ததினும் அதிகமாக இப்போது அவன் அறிவான். உன் வாய் திறந்து உதிரும் சொற்களை அவன் தானறிந்தவற்றுடன் பொருத்திப் பார்க்க நினைக்கிறான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!