துணி துவைப்பதற்குப் போகும் நேரத்தை விட, சலவை இயந்திரத்தினுள் தொலைந்து போன ஒற்றைக் காலுறையைத் தேடுவதற்கு அதிக நேரம் செலவாகும். அது கடைசி வரை கிடைக்காமலே போகவும் வாய்ப்புண்டு. எதற்காக சாக்ஸையெல்லாம் மெஷினில் போட வேண்டும். கையால் அலசினால் கை தேய்ந்தா போய்விடும் என்பார்கள், பெரியவர்கள். ஆனால், “எதற்காகத் துவைக்கனும்?” என்று கேள்வி கேட்டு நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது ஒரு ஃப்ரெஞ்ச் நிறுவனம்.
அதாவது, துணியை நாங்களெல்லாம் அளவுக்கதிகமாத் துவைக்கிறோமாம். அவர்களுக்கு அமைய, ஒரு கம்பளி நைட்டியை பதினைந்து நாள்களுக்கொருமுறை துவைத்தால் போதுமானது. டீ சர்ட் இன் கெடு ஐந்து நாள். டெனிம் ஜீன்ஸுக்கு ஒரு மாதம்! அறிக்கையை வெளியிட்டிருப்பது ETA எனப்படும் அரச சுற்றுச் சூழல் ஏஜன்சி என்பதால் ஃப்ரான்ஸ் மக்களும், எதிர்க்கட்சிகளும் எல்லாத் தளங்களிலும் வறுத்தெடுத்து வருகிறார்கள். “நீங்க எங்களுக்கு உள்ளாடைகளை எத்தனை தடவை அணிவது என்று சொல்றதுக்கா இவ்வளவு டாக்ஸ் கட்றோம்? “
“அமெரிக்கா அங்கே வானத்தைத் தொடுகிறது. நமது தலைமைகள் துணியிலுள்ள அழுக்கு பற்றிப் பேசுகிறார்கள்” என்பதாக, பலவிதமான கருத்துகள் பறக்கின்றன.
Add Comment