Home » G இன்றி அமையாது உலகு – 27
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 27

27. இயந்திரவியல்

மனிதன் முதலில் தன் வேலைகளைத் துரிதமாகச் செய்ய இயந்திரங்களை உருவாக்கினான். அது அவனுக்கு மூன்றாவது கரமென அமைந்தது. அவன் செய்யும் பல வேலைகளில் பங்கெடுத்துக்கொண்டு அவன் வாழ்வை எளிமைப்படுத்தியது. ஒரு மனிதன் செய்யும் வேலையை இன்னொரு இயந்திரம் செய்வது சரிதான். பல மனிதர்களின் வேலையை அது பகிர்ந்து கொண்டு செயல்படும்போதுதான் அதன் உருவாக்கத்திற்கு ஓர் அர்த்தம் இருக்கும் என்று எண்ணினான். செயல்படுத்தினான். இயந்திரங்கள் பல மனிதர்களின் வேலைகளை வெகு எளிதாகச் செய்யத் தொடங்கியது. காலம், நேரம், பணம் எல்லாவற்றிலும் அவனுக்குப் பேருதவியாக அமைந்தது.

தொழிற்சாலைகள் பெருகின. மனிதர்களோடு இணைந்து அந்த இயந்திரங்களும் தொழிற்புரட்சியில் தாமும் ஓர் அங்கமென இணைந்தன. எதை நினைத்து இயந்திரங்கள் உருவாக்கப்பட்டனவோ அதன் உச்சம் நிகழ்ந்த காலம் அது. மகிழ்ந்திருந்தான்.

பின்னர் கணினிக்காலம் வந்தது. இயந்திரங்களில் கரங்களுக்கு மெக்கானிக்ஸும், மூளைக்கு மைக்ரோ சிப்களும் என்று நவீனம் வளர்ந்தது. இப்போது நூறு இயந்திரங்களின் நவீனமும், ஒரு மனித மூளையின் கலவையும் இணைந்த ரோபாட்களை உருவாக்கினான். அது இன்னும் ஒரு படி மேலே போய், தனக்கு உருவாக்கித் தந்த கட்டளைகளை உள்வாங்கிக்கொண்டு மனிதன் மட்டுமே செய்யும் வேலையைத் திறம்பட உள்வாங்கிக்கொண்டு இயந்திரமனிதன் என்கிற புதிய அடைமொழியை வாங்கிக்கொண்டு திறம்பட இயங்க ஆரம்பித்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!