2023-24ஆம் ஆண்டுகளில் இந்திய-சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு எண்ணூறு கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் ரோந்துப் பணியின்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை வெளிநாட்டுத் தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்தது. இதைத் தொடர்ந்து மூன்று உள்ளூர்வாசிகளை எல்லைப் பாதுகாப்புப் படை கைது செய்தது.
மனிதர்களின் மனம் கவர்ந்த உலோகங்களில் தங்கம் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பெண்கள் விரும்பி அணியும் ஆபரணப் பொருள்களில் தங்க நகைகள் முதன்மையானவை. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளிலும், தீபாவளி போன்ற பண்டிகை நாள்களிலும் தங்க நகை அணிவது ஒரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.














Add Comment