முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக இத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையும் அறிவித்துள்ளது. தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய வாக்காளர் அடையாள அட்டை சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு பீகார் மாநிலம் உடனடியாகச் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கிறது.
பீகார் சட்டப்பேரவை, 243 தொகுதிகளைக் கொண்டது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான பீகார் மாநில மகாபந்தன் கூட்டணி, தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி ஆகியவை இம்முறை போட்டியிடுகின்றன. அதனால் கடுமையான மும்முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளன. ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார், பெண்கள் தொழில் தொடங்க பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.















Add Comment