கிடங்குத் தெருவிற்குப் பேருந்தில் சென்றால் பாரிமுனையில் இறங்கிக் கொள்ள வேண்டும். மெட்ரோ எனில் உயர் நீதிமன்றத்தில் இறங்க வேண்டும். யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள். இங்கே செல்லப் பொது வாகனம் தான் வசதி. சொந்த வாகனத்தில் சென்றால் பார்க்கிங் செய்வது கடினம்.
அது ஒரு ஞாயிறு என்பதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இதுவரை பார்க்காத ஒரு உலகத்தைக் காட்டிக் கொடுத்தது. எப்போதும் திருவிழாக் கூட்டம் போல் தலைகளாகத் தெரியும் தெருவானது அன்று தலையில்லாத உடலாகத் தெரிந்தது. மூடிய கடைகளின் வாசலில் ஒரு பாட்டியும் பேரனும் அட்டைகளை அடுக்கிக் கட்டும் பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். கூடவே அட்டைகளைக் கட்டும் டேப் மற்றும் துணிகள் சுற்றி வரும் சிறிய பைப்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாட்டியிடம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டதற்கு….
Add Comment