Home » நெய் குளிக்கும் ரொட்டி; மெய் சிலிர்க்கும் பயணம்!
பயணம்

நெய் குளிக்கும் ரொட்டி; மெய் சிலிர்க்கும் பயணம்!

வேகமாக நடந்தால் ஐந்து நிமிடங்களில் கடந்து சென்றுவிடக்கூடிய ஓர் ஊர். அளவான மக்கள் நெருக்கம். பத்து, பதினைந்து உணவகங்கள். அதே அளவு தங்கும் விடுதிகள். பெரும்பாலும் ஹோம்ஸ்டே என்று சொல்லப்படும் வகையிலானவை. வரும் பக்தர்கள்தாம் இவர்களின் ஆதாரம். ஆனால் பக்தர்களுக்கு இந்த ஊரில் வீற்றிருக்கும் ஜாகேஷ்வர்தான் ஆதாரம். தெய்வத்தின் பெயரையே ஊரின் பெயராகவும் கொண்டுள்ள அந்தத் தலம்தான் உத்தர்கண்ட் மாநிலத்தில் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜாகேஷ்வர்.

சிறிதும் பெரிதுமாக நூற்றிருபத்தைந்து சிவன் கோயில்களை உள்ளடக்கியது இந்த ஆலயம். ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை பாறைகளைக் குடைந்து, அந்தப் பாறைகளைக் கொண்டே இந்தக்கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஊர் எல்லையில் தண்டேஸ்வரர் கோயிலும், ஜாகேஷ்வர் கோவிலுக்குப் பின்னே ஒரு மலையில் குபேரன் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் காணிக்கையளித்தால் ஒரு மஞ்சள் துணியில் கட்டப்பட்டுள்ள ஒரு ரூபாய் நாணயம் கொடுக்கிறார்கள். அதை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்று சொல்கிறார்கள்.

ஜாகேஷ்வர் கோவிலின் பிரதானமாக மகா மிருத்யுஞ்ஜயேஸ்வர் ஆலயம் உள்ளது. அதையடுத்து ஓர் ஆஞ்சநேயர் சந்நிதி, கேதார்நாத் சந்நிதி, புஷ்டி மாதா என்று அழைக்கப்படும் அம்மன் சந்நிதியென அமைந்துள்ளது. மத்தியில் தலநாதரான ஜாகேஷ்வர் சந்நிதி. சுயம்புவாக உருவான இந்த லிங்கம்தான் ஊர் பெயராகவும் மாறி விட்டது. வட மாநிலங்களுக்கே உரித்தான வழிபாட்டு முறைகளின்படி லிங்கங்களைத் தொட்டு பூஜிக்க முடிகிறது. ஜடகங்கா நதியின் தீர்த்தங்களால் அபிஷேகம் செய்ய அனுமதிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய சொம்பில் நீரை அள்ளிக் கொடுக்க உங்கள் வேண்டுதல்களைச் சொல்லிக் கஷ்டங்களைத் தீர்த்துவைக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார் பூசாரி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்