ஹிலரி கிளிண்டன்
‘உனக்கென ஒரு பாதை, முடியாததென்று எதுவும் இல்லை’ என்கிற அன்னை. ‘வானமே எல்லை, ஆனால் எதிலும் நேர்த்தியும் ஒழுங்கும் வேண்டும்’ என்கிற தந்தை. இந்த இருவரால் வளர்க்கப்பட்டவர்தான் ஹிலரி. அமெரிக்க அரசியலின் கண்ணாடிக் கூரையை உடைத்து ஆகாயத்தை எட்ட முயன்ற ஒரு பெண்ணின் கதை இது. ஹிலரி ரோதம் கிளிண்டனின் வாழ்க்கை வெறும் அரசியல் பயணம் மட்டுமல்ல, பலருக்கும் உத்வேகம் கொடுக்கக் கூடிய வழிகாட்டியும் கூட.
1947ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்த ஹிலரி, தன் தாய் டோரதி ரோதமிடம் இருந்து வாழ்க்கையின் மிக முக்கியமான பாடத்தைக் கற்றார். ‘தொடரும் சமூக நீதிக்கான போராட்டம்தான் உன் வாழ்க்கை. அதில் நீ பின்வாங்காதே, உனக்கென ஒரு நிலைப்பாட்டை எடு’ என்ற அன்னையின் வார்த்தைகள், பின்னாளில் அவரது அரசியல் வாழ்க்கையின் முதுகெலும்பாக அமைந்தது.
வெல்லஸ்லி கல்லூரியில் படித்த காலத்தில், ஹிலரி முதல் மாணவியாகப் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். 1969இல் அவர் ஆற்றிய அந்த உரை, அமெரிக்க இளைஞர்களின் குரலாக ஒலித்தது. அந்த இளம்பெண்ணின் புகைப்படம் டைம் இதழின் பக்கங்களை அலங்கரித்தது. இது அவரது பொது வாழ்க்கையின் முதல் சாதனையாக அமைந்தது.















Add Comment