லாரா புஷ்
அமெரிக்காவின் இதயமான நியூயார்க் நகரின் கம்பீரமான இரட்டைக் கோபுரங்கள், அமெரிக்கப் பெருமிதத்தின் அடையாளங்களாக இருந்திருக்கின்றன. 2001 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் அவை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டபோது உலகமே அதிர்ந்து போய்விட்டது. யார் இந்தக் கொடுமையான வேலையைச் செய்தது? மனிதர்கள் இத்தனை கொடூரமானவர்களா? யார் மீதும் இனி நம்பிக்கை கொள்ள முடியாதா?
அப்போது மக்களுக்கு நம்பிக்கை ஏற்றும் விதமாக ‘நம் குழந்தைகளுக்கு மீண்டும் உறுதி தர வேண்டும், வீடுகளிலும் பள்ளிகளிலும் அவர்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். உலகில் பல கோடி நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒரு சில மனிதர்களே தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்ற உத்வேகச் செய்தியை ஏந்தி ஒரு குரல் வந்தது.
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் லாரா புஷ். அமெரிக்காவின் 43வது ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் மனைவி. நூலகர், ஆசிரியர், எழுத்தாளர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு விதிவிலக்கான ஆளுமை. அவர் தனது எளிமையான குணநலன், குழந்தைகளின் மேல் கொண்ட அளவற்ற அன்பு, கல்வி மீதான ஆழமான ஆர்வம் ஆகியவற்றால் பலரின் மனதிலும் இடம்பிடித்தார்.















Add Comment