Home » முகவரியற்றவர்கள்
சமூகம்

முகவரியற்றவர்கள்

மார்ச் 2023.

இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் ஓர் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது. குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் உள்ளது மூவாகந்த எனும் தோட்டம். அதில் வசிக்கும் ஜீவரட்ணம் சுரேஷ்குமார் எனும் இளைஞர்தான் இந்த மனுவைத் தாக்கல் செய்தவர்.

தனக்கும், தான் வாழும் ஊர் மக்களுக்கும் நிரந்தர முகவரி இல்லை எனவும், இதனால் கடிதங்களையும் பொருட்களையும் உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது அரசியலமைப்பு தனக்கு வழங்கியுள்ள உரிமைகளை மீறும் செயலாகும். எனவே, தனக்கென ஒரு முகவரியை வழங்க உத்தரவிட வேண்டும் என சுரேஷ்குமார் நீதிமன்றத்தைக் கோரினார்.

இரண்டு மாதங்கள் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அதே ஆண்டு டிசம்பரில் இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு முகவரியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையைத் தொடருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முதற்கட்டமாக மூவாகந்த தோட்ட மக்களுக்கு முகவரிகள் வழங்கப்படுமெனக் கூறப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!