2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர் மரியா கொரினோ மச்சாடோ. இவர் வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்தவர்.
சதி, வெறுப்பைத் தூண்டுதல், பயங்கரவாதம் போன்ற செயல்களுக்காக மரியா கொரினோ மச்சாடோ வெனிசுவேலா அரசின் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். ஆம், மச்சாடோ ஓராண்டுக்கும் மேலாக வெனிசுவேலாவின் ஏதோ ஒரு மூலையில் தலைமறைவாக இருக்கிறார்.
மரியா மச்சாடோ, வரும் டிசம்பர் பத்தாம் தேதி நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ள நார்வே செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் அவர் ‘தப்பியோடிய குற்றவாளி’ எனக் கருதப்படுவார் என்று வெனிசுவேலா அரசு வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளது.
மரியா கொரினோ மச்சாடோவை எதற்காக வெனிசுவேலா அரசு சிறையிலடைக்கத் துடிக்கிறது?
ஐம்பத்தெட்டு வயதான மச்சாடோ, அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகார ஆட்சியைத் தீவிரமாக எதிர்க்கும் ஒரு ஜனநாயகப் போராளி. வெனிசுவேலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்றழைக்கப்படுகிறார்.














Add Comment