அமெரிக்காவும் ரஷ்யாவும் தொழில்நுட்ப மேன்மையைக் காட்டுவதற்காக மட்டும் நிலவுக்கு விண்கலங்களை அனுப்புவதில்லை. எதிர்காலத்தில் அங்கு மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக ஒரு நிரந்தர முகாமை அமைப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கும், அதற்கு அப்பாலும் விண்வெளி ஆராய்ச்சியை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான இடமாக நிலா பார்க்கப்படுகிறது.
அதற்கான காரணங்கள் என்ன?
நிலவை விண்வெளியின் எரிபொருள் நிரப்பும் நிலையமாக (Gas Station) பயன்படுத்தலாம். அதன் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜனை எரிபொருளாகவும், ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்காகவும் பயன்படுத்தலாம். இதனால் பூமியில் இருந்து அதிக எடையுள்ள எரிபொருளையும் ஆக்ஸிஜனையும் சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும், நிலவின் ஈர்ப்பு விசை பூமியை விட ஆறு மடங்கு குறைவானது. எனவே நிலவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ராக்கெட்டை ஏவுவதற்கு மிகக் குறைந்த ஆற்றலும் எரிபொருளுமே போதுமானது.














👏👏👏👏👏 சிறப்பான கட்டுரை