ஆப்பிரிக்காவின் ஜெருசலேம்
நூலகத்தின் கட்டடக்கலைப் பிரிவில் மிகப் பெரிய புத்தகத்தை ஒருவர் புரட்டிக் கொண்டிருந்தார். அதில் புகைப்படங்கள் மட்டும் இருந்தன. தூரத்திலிருந்து பார்க்கும்போதே அந்தப் படங்கள் பிரம்மாண்டமாகத் தெரிந்தன. அவர் அருகில் சென்று அறிமுகம் செய்து கொண்டேன்.
அவர் பெயர் தேஜேஸ். எத்தியோப்பியாவின் அக்சம் (Axum) நகரைச் சேர்ந்தவர். துபாயில் பொறியாளராக வேலை செய்து வருகிறார்.
அதுவரை நூலகத்தில் அத்தனை பெரிய புகைப்பட ஆல்பத்தைப் பார்த்ததில்லையே என்று வியந்தேன். இதைப் போலப் பல நாட்டுக் கட்டடங்களின் புகைப்படங்கள் உள்ள அலமாரியைக் காண்பித்தார்.










Add Comment