Home » ஓய்வெடுக்கும் கணினிகள்
இன்குபேட்டர்

ஓய்வெடுக்கும் கணினிகள்

கணினி பயன்படுத்தாத துறையோ அல்லது நபரோ இல்லை எனுமளவு இன்றைய மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையுடன் கணினித் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. எமது கைகளில் உள்ள தொலைப் பேசிகளிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் விண்கலங்கள் வரை கணினித் தொழில்நுட்பம் எமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில வருடங்களாகப் பிரபலமடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு எமது வாழ்க்கையில் கணினிப் பயன்பாட்டினை அடுத்த தரத்துக்கு நகர்த்திச் செல்கிறது. வளர்ச்சியோடு சேர்ந்து சவால்களும் இருப்பது எல்லாத் துறைகளுக்கும் பொதுவான ஒரு பிரச்சினையே. கணினித் துறையும் இதற்கு விதி விலக்கானதல்ல.

செயற்கை நுண்ணறிவினால் நாம் கொடுக்கும் கட்டளைக்கேற்பத் தகவலையோ, படங்களையோ, வீடியோக்களையோ உருவாக்கித் தரமுடியும். நாளுக்கு நாள் செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் தகவல்கள் சரியானதாகவும் துல்லியமானதாகவும் இருக்கும் அளவும் கூடிக் கொண்டு செல்கிறது. ஆனாலும் செயற்கை நுண்ணறிவின் செயற்பாடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரச் சக்தியின் (energy) அளவும் மிகவும் அதிகமானதாகவே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மட்டுமல்லாது பொதுவாகவே கணினிகளால் விரயமாக்கப்படும் சக்தியின் அளவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. நாம் பயன்படுத்தும் திறன்பேசிகள் நாளுக்கு ஒரு தடவையாவது சார்ஜ் பண்ண வேண்டிய தேவையுள்ளது அல்லவா. அது போல உலகில் உள்ள அனைத்துக் கணினிப் பாகங்களும் இயங்குவதற்கு எவ்வளவு மின்சாரம் உபயோகப் படுத்தப்படுகின்றது என்று கற்பனை செய்து பாருங்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!