119 வாந்தி
‘தேவடியாப் பையா!’ என்றார் சுப்ரமண்ய ராஜு, மாரீஸ் பாரில் கதவை அடுத்து சுவரையொட்டிப் போடப்பட்டிருந்த நீளவாக்கிலிருந்த சோஃபாவில் அமர்ந்து கைகளை நீட்டிப் போட்டுக்கொண்டபடி.
கையில் பேண்டு மாஸ்டர் பிளண்டு விஸ்கி கிளாஸுடன் அருகில் இவன் அமர்ந்திருந்தான். இவன் கிளாஸில் இருந்த ஸ்மாலில் பாதியைக் குடித்திருந்தும் ராஜு ஏன் இன்னும் கிளாஸையே எடுக்காமல் இருக்கிறார் என்று வியந்தவண்ணம் இருக்கையில்தான், இவனைப் பார்த்துத் ‘தேவடியாப் பையா’ என்று ஆரம்பித்தார்.
‘உன் தலைல பூரா சுந்தர ராமசாமி குப்பைதான் லாரி லாரியா கொட்டிக்கெடக்குது. மனசுல உன்னைப் பத்திப் பெரிய புடுங்கினு நெனச்சிக்கிட்டு இருக்கியா’ என்று தொடங்கியவர்,
‘உன்னைக் குடிச்சிட்டுத் திட்டிட்டேன்னு நீ சாதாரணமா நெனச்சிடக் கூடாதுன்னுதான் திட்டிட்டுக் குடிக்கிறேன்’ என்று தம் கிளாஸைக் கையில் எடுத்தார்.
Add Comment