Home » பொய்யுலகப் போர்க்களம்
உலகம்

பொய்யுலகப் போர்க்களம்

பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய இராணுவம் பாகிஸ்தானிலிருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதலை நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இப்படி ஆயுதங்கள் தாங்கி இரு தரப்பும் ஒருபுறம் சண்டை செய்துகொண்டிருக்க செய்தி ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பல்வேறு செய்திகள் பரவத் தொடங்கின. எந்தச் செய்தி உண்மை, யார் சொல்வது உண்மை எனக் கண்டறிய முடியாத அளவுக்குப் பொய்ச் செய்திகளும் கட்டுக் கதைகளும் நிரம்பி வழிந்தன.

பாகிஸ்தானிலிருந்து இயங்கும் ஒன்பது தீவிரவாத முகாம்களை நள்ளிரவில் குறிவைத்துத் தாக்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மறுநாள் சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியானது. இன்னொரு போரா என்னும் கேள்வியோடே இந்தச் செய்தியைப் பெரும்பான்மையான உலக மக்கள் எதிர்கொண்டனர். இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்தியது உண்மை. ஆனால் நாங்களும் பதில் தாக்குதல் நடத்தினோம். அதில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஐந்து போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தினோம் எனத் தனது  இராணுவத்துக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தது பாகிஸ்தான் அரசு. இந்திய இராணுவத்துக்கு எந்தச் சேதாரமும் இல்லை எனப் பதிலளித்தது இந்திய இராணுவம். அன்றைக்கு ஆரம்பித்து டிரம்ப் தலையிட்டுப் போர் நிறுத்தம் செய்ய இருதரப்பும் ஒப்புக்கொண்டது எனச் சொன்னது வரையிலும் கணக்கிலடங்காத செய்திகளை நாம் கேட்டாகிவிட்டது. இருதரப்பிலிருந்தும் என்னவெல்லாம் சொன்னார்கள்? எவையெல்லாம் உண்மை? கொஞ்சம் அறிவுப்பூர்வமாகக் கண்டறிய முயற்சி செய்வோம்.

முதல் தாக்குதலின்போதே இந்திய இராணுவம் பாகிஸ்தானில் ஆறு நகரங்களைக் குறிவைத்ததாகவும் அதில் சிறு குழந்தை உள்ளிட்ட முப்பத்தைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அதை இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக உலக நாடுகளுக்கு விளக்கும் பொருட்டு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தீவிரவாத முகாம்களை மட்டுமே துல்லியமாகக் குறிவைத்துத் தாக்கியதாக இந்திய இராணுவ அதிகாரிகளும் வெளியுறவுத்துறைச் செயலாளரும் விளக்கம் கொடுத்தனர். மறுநாள் இந்திய எல்லையோர நகரங்களைத் தாக்கிய பாகிஸ்தான் இராணுவம் ஐந்து குழந்தைகள் உள்படப் பதினாறு பேரைக் கொன்று விட்டதாக இந்தியத் தரப்பிலிருந்து குற்றஞ்சாட்டப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!