“பிரதமர் மோடி மீது எந்த வெறுப்புணர்வும் இல்லை. அவர் மீது அனுதாபம் தான் ஏற்படுகிறது” என ராகுல் காந்தி தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது பேசியிருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்றார். எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பிறகு ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இது.
வாஷிங்டன், டல்லாஸ், ஜார்ஜ்டவுன் மற்றும் டெக்சாஸ் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசினார். புலம் பெயர்ந்த இந்தியர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகர்கள் என பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அவருடைய இந்தப் பயணத்தின்போது சொன்ன பல கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகியிருன்றன.
இந்தியாவை விட்டு ராகுல் கந்தி எங்கு எப்போது சென்றாலும் அது செய்தியாகிவிடுவது வாடிக்கையாக மாறிவிட்டது. அதுவும் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது அவர் பேசும் பேச்சுகள் அத்தனையும் கவனம் பெறுகின்றன. உண்மையில் அவர் அப்படி என்ன பேசினார்? ஏன் பாஜக தலைவர்கள் தொடர்ந்து அவரை விமர்சிக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்வோம்.
Add Comment