பேனாவும் பெண்ணியமும்
(கிறிஸ்டின் டி பிசான்)
கி.பி 1405ஆம் ஆண்டு. பாரிஸ் நகரின் கடும் குளிர்காலக் காலைப் பொழுது. செய்ன் நதிக்கரையிலிருந்து வீசிய உறைபனிக் காற்று ஜன்னல் கதவுகளைத் தட்டியது. தனது சிறிய அறையின் மர மேஜையில் அமர்ந்திருந்தார் கிறிஸ்டின் டி பிசான்.
தந்தை தோமசோ மற்றும் கணவர் எட்டினேவின் திடீர் மறைவு அவரது வாழ்வை உலுக்கியிருந்தது. முதிய தாய், மூன்று பிள்ளைகளின் வாழ்வாதாரம் அவரது கைகளில் இருந்தது. தந்தை அரசவை மருத்துவராக இருந்தார்.
அக்காலத்தில் அவரது தயவால் அரசர் ஐந்தாம் சார்லஸின் அரண்மனை நூலகத்துக்குச் சென்று வாசிப்பது பழக்கமாக இருந்தது. மனம் துவளும் போதெல்லாம், படித்த லத்தீன் நூல்களின் தத்துவங்கள் அவரது மனக்கண் முன் வந்தன. கையிலிருந்த இறகுப் பேனாவை மையில் தோய்த்தார். ஆட்டுத் தோலால் ஆன வெல்லம் (Vellum) காகிதத்தின் மீது முதல் வரியை எழுதினார்.
அவர்தான் ஐரோப்பிய வரலாற்றில் எழுத்தைத் தொழிலாக ஏற்ற முதல் பெண் எழுத்தாளர். ஆண்கள் மட்டுமே எழுதிய காலம் அது. ஆனால், தன் கூர்மையான எழுத்தால் ஃபிரான்ஸ் அரண்மனையையே வியக்க வைத்தார். சொந்தமாகப் புத்தகம் எழுதி வாழ்வாதாரம் ஈட்டிய மாபெரும் ஆளுமை அவர்.















Add Comment