Home » சாமிபூமி தொடர்

Tag - சாமிபூமி தொடர்

சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 11

காத்தவராயன் நள்ளிரவு. குதிரைகளின் குளம்பொலிகளால் காடு அதிர்ந்தது. பயத்தில் விலங்குகளும் பறவைகளும் அலறின. தீப்பந்தங்களுடன் இருநூறு வீரர்கள் காத்தவராயனைத் துரத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கையில் வாள். இன்னொரு கையில் வில். முதுகில் அம்புக்கூடு. காத்தவராயனின் குதிரை காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 10

அங்காளம்மன் மலையரசன் கோட்டையின் அரண்மனைக் கதவுகள் தாமாகத் திறந்தன. பாம்புகள் ஊர்ந்து உள்ளே நுழைந்தன. இரவுக் காவலர்கள் தூண்களில் ஏறிக் கை கால்களைப் பிணைத்துக் கொண்டார்கள். மலையரசனின் பள்ளியறை ஜன்னல் திரை கீழிறங்கியது. அதில் ரத்த நிறத்தில் ஒரு வாசகம் தோன்றியது. ‘நந்தவனத்துக்கு வா.’ அரசன் வாளுடன்...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 9

பிடாரி குதிரைகளின் குளம்பொலிகளும் கனைப்புகளும் பலமாகக் கேட்டன. இரவு நாய்களின் குரைப்புச் சத்தம் கேட்கவில்லை. ஆடு, மாடுகள் அலறின. ஊர்க் காவலனைக் காணவில்லை. திண்ணையில் படுத்துறங்கும் கிழவர்கள் யாரும் தென்படவில்லை. ‘வெரசையா இழுத்துட்டுப் போடா’, கொள்ளையர்கள் கூட்டம் கிராமத்துக்குள்...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 8

இசக்கி நீலியின் முகம் கோரமாக மாறியது. ஆனந்தனைப் பார்த்துக் கோரைப் பற்கள் தெரிய ஆக்ரோஷமாகச் சிரித்தாள். இந்த வாய்ப்புக்காகத்தானே இந்தப் பிறவி முழுவதும் ஒரு விலங்கு போல வனத்தில் காத்திருந்தாள்? ஏன் இப்படி வெறிபிடித்தவள் போல இருக்கிறாள் நீலி? அது இரண்டு பிறவிகளுக்கு நீண்ட கதை. முற்பிறவியில் அவள்...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 7

சுடலைமாடன் பெற்றோரால் விரட்டியடிக்கப்பட்ட சுடலைமாடன், பூமி முழுவதும் சுற்றி வந்தான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இடுகாட்டில் பிறந்தவன். பெரும்பசியுடையவன். பிணங்களைத் தின்றால் மட்டுமே அவன் பசி அடங்கும். இடுகாட்டில் பிணங்களைத் தின்றுவிட்டு இலக்கில்லாமல் சுற்றித் திரிந்தான்...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 6

மாசாணியம்மன் இருள் சூழ்ந்த நள்ளிரவில் ஆனைமலைக் காட்டில் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணை காரகன் என்னும் அரக்கன் துரத்திக் கொண்டிருந்தான். வாயில் மூச்சு வாங்கிக் கொண்டே அவள் வேகமாக ஓடினாள். மாட்டுச் சாணத்தை மிதித்துவிட நிலை தடுமாறிக் கீழே விழுந்தாள். இனி அவளால் ஓட முடியாது என்பது அரக்கனுக்குத்...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 5

மதுரை வீரன் மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு மேடையில் வீரையன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். உயரே இருந்த சங்கிலிகளால் இரண்டு கைகளும் பிணைக்கப்பட்டிருந்தன. கால்களும் அவ்வாறே சங்கிலிகளால் பின்னப்பட்டிருந்தன. மாறுகால், மாறுகை வாங்க வேண்டும் என்பது மன்னன் திருமலை நாயக்கனின் உத்தரவு. அதாவது ஒரு கை, ஒரு காலை...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 4

பேச்சியம்மன் பெரியாச்சிக்குக் கோபத்தில் கண்கள் சிவந்தன. ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொண்டாள். மேலும் ஆறு கைகள் முளைத்தன. வலது கையால் ராணியை இழுத்துத் தன் மடியில் கிடத்தினாள். தனது கூரிய நகங்களால் அவளுடைய வயிற்றைக் கிழித்தாள். அரசி துடிதுடித்துச் செத்துப் போனாள்...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 3

முனீஸ்வரன் நள்ளிரவில் அலகாட்சியம்மாவும் அவளது கணவனும் அலங்காநல்லூர் கிராம எல்லைக்கு ஓலைப்பெட்டியுடன் வந்தார்கள். அலங்காட்சியம்மா ஓலைப்பெட்டியைத் திறந்தாள். ஒரு சுருட்டுப் புகை போல மெலிதாகக் கிளம்பி உயரே எழும்பியது முனியாண்டி. புகை உயரமாக விரிந்தது. மனித ரூபத்துக்கு வந்தது. அலங்காட்சி பிரமிப்பாகப்...

Read More
சாமிபூமி • தொடர்கள்

சாமிபூமி – 2

ஐயனார் மலையடிவாரக் கிராமத்துக்கு இந்தச் சாமி வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. காலையில் மக்கள் காட்டு வேலைக்குச் சென்றபோது கண்டிருக்கின்றனர். ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அருகில் ஒரு வெள்ளைக் குதிரை கட்டப்பட்டிருந்தது. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. சாமியாரைத் தொந்தரவு செய்ய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!